தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

9/26/2009

Baba kukai

ரஜினி வழியில் பாபாவின் குகைக்கு ஒரு பயணம்… - வீடியோ
(Tuesday, 22nd September 2009)

சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சென்று ஆன்மீக தேடலில் ஈடுபடும் இமயமலையின் பாபாஜி குகைக்கு ஜூனியர் விகடன் - விஜய் டிவி இணைந்து மேற்கொண்ட ஒரு பயணம் இது.

வழக்கமான ஜர்னலிஸம் போரடித்துப் போக, அட்வென்ச்சர் ஜர்னலிஸம் தேடி இந்த மாதிரி புதுமையான நிகழ்ச்சித் தயாரிப்பில் இறங்கியவர் ராஜநாராயணன்.

முதல் க்ளிப்பில் அவர் ரஜினிக்கு அளித்துள்ள அறிமுகவுரையைக் கவனியுங்கள்… ரஜினியை வெறும் செய்திகளின் நாயகனாகப் பார்ப்பவர்களால் அப்படி எழுத முடியாது. ரஜினி என்ற நடிகரையும் தாண்டி, அவரை மிகச் சிறந்த மனிதராகப் பார்ப்பவர்களால் மட்டுமே அப்படி ஒரு அறிமுகம் தரமுடியும்.

அதன் வீடியோ வடிவம்…
Tanks to rajinifans.com

9/05/2009

எந்திரனாக வரும் ரஜினி

சிறுசேரியில் எந்திரன் ....
(Tuesday, 1st September 2009)
எந்திரன் படப்பிடிப்பின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் சிறுசேரியில் கடந்த சில தினங்களாகப் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஷெட்யூலில் வித்தியாசமான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பர்வீன் ட்ராவல்ஸிலிருந்து ஒரு சொகுசு பஸ்ஸை வாடகைக்கு எடுத்து, அதை ஒரு செயற்கை கம்ப்யூட்டர் ஆராய்ச்சி லேப் ஆகவே மாற்றியிருக்கிறார்கள்.

இந்த லேபுக்குள் உள்ள ரஜினியை 20 பேர் தாக்குவது போன்ற காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். எந்திரன் ஷூட்டிங் என்றதும் வழக்கம்போலவே அந்தப் பகுதி முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டதாம். கிராமப்புற மக்கள் என்றில்லாமல், சிறுசேரி சிப்கார் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்களும் கிடைக்கிற கேப்பில் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க குழுமிவிட்டார்களாம்.

எந்திரன் யூனிட்டில் நமக்கு நன்கு அறிமுகமான ஒரு பிரமுகர் இருக்கிறார். அவர் ரஜினிக்கும் ரொம்ப பிடித்தமானவர், நெருக்கமானவர்... அவர்தான் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு.

"படத்தின் காட்சிமைப்புகளில் பிரமாண்டம் மட்டுமல்ல... லாஜிக் மீறல் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது ஷங்கரின் கட்டாய உத்தரவு. காரணம் ரஜினி சார் இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருப்பதுதான்.

ஒவ்வொரு காட்சியும் சர்வதேசத் தரத்தில், எந்த நாட்டு திரைத் தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் வியக்கும் அளவுக்கு இருக்கும்.

என் கவலையெல்லாம், ரஜினி சார் இந்தப் படத்துக்குப் பிறகு வரும் ஹாலிவுட் படங்களை மறுத்துவிடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான். நீங்கள் எல்லோரும் செய்தியைப் படிப்பவர்கள்... நான் படம் பிடிப்பவன். எனக்குத் தெரிகிறது இந்தப் படத்தின் ரேஞ்ச் என்னவென்று. படம் வெளியான பிறகு நான் சொன்னது ரொம்ப குறைவு என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்தப் படத்துக்கென்று எந்த Hype-ம் தேவையே இல்லை. ஜஸ்ட் ஒரே ஒரு கட்சியை teaser piece -ஆக விட்டாலும் போதும், ரசிகர் மனங்களில் ஆர்வத் தீ பற்றிக் கொள்ளும்...," என்றார்.

'சரி... தலைவர் படத்துல இதெல்லாம் சகஜம்தான்... ரிலீஸ் தேதிய சொல்லுங்க!' என்றோம்.

அடுத்த ஆண்டு நிச்சயம். அதில் ரஜினி சார் மிக உறுதியா இருக்கார், என்றார்.

நமக்குள் ரொம்ப நாளாக குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்வியை இவரிடம் கேட்டோம்.

'ஆமா... வெளியில் தலைவர் இவ்வளவு இயல்பான தோற்றத்திலேயே வந்துவிடுகிறார். மீண்டும் செட்டுக்குள் வந்து தயாராக எவ்வளவு நேரம் பிடிக்கும்... பிரத்தியேகமாக மேக்கப் சமாச்சாரங்கள் உண்டா...?

பிரத்தியேக மேக்கப் எல்லாம் உண்டுதான். ஆனால் அவர் தயாராக அதிகபட்சம் அரைமணி நேரம் கூட தேவையிருக்காது. அது என்ன மாயமோ தெரியவில்லை... வந்த வேகத்தில் மேக்கப் போட்டுக் கொண்டு முற்றிலும் புதிதாக வந்து நிற்பார்... உள்ளே நுழைந்த ரஜினி சார் இவர்தானா என்ற சந்தேகம் வந்துவிடும். அது இறைவன் அவருக்கு மட்டுமே கொடுத்த வரம் போலிருக்கிறது. இந்தப் படத்தில் எந்திரனாக வரும் ரஜினிக்கு மிகப் பிரத்தியேகமான மேக்கப். அதற்கு கொஞ்சம் நிறைய நேரம் தேவைப்பட்டது," என்றார்


"thak to rajini fans .com"