தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

11/29/2009

கீதோபதேசம் - மூன்று வகை குணங்கள்


அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜோ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்து கிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.

அர்ஜுனா!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது,

நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது. வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.

அது போலவே அர்ஜுனா, யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம். ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவும், தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!

- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.

என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

11/22/2009

அக்பர் பீர்பால் கதைகள்!
கிணற்றுக்குள் விழுந்த வைர மோதிரம்!

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார்.

அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,"

என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர்.

"ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு நூலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சானத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை கிணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். சானத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது.

பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார்.

"பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

11/18/2009

ஸ்ரீ ஐயப்பன் கவசம்

சுவாமியே சரணம் ஐயப்பா


ஸ்ரீ ஐயப்பன் கவசம்


அரிஹ்ர புத்ரனை, ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரிகிரிசினை, சாந்த சொருபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே.
ஐயப்ப தேவன் கவசமிதனை
அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வரும்.

நூல்

மண்ணுலக கெல்லாம் காத்தருள் செய்ய
மணிக்ண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக. 1

புலி வாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணிய மூர்த்தியே வருக வருக. 2

பூத நாயகா வருக வருக
புஷ்கலை பதியே வருக வருக
பொன்னம்பலத்துறை ஈசா வருக வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக. 3

வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக. 4

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகன்றிட அனொஅனே வருக
இருவினை களைந்தே எணயாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக. 5

பதிணென் படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களூம் அடி பணிந்திடுமே. 6

சபரிகிரீசனை நினைத்தே நீறிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே. 7

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க
அவனியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர் 8

சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சற்குருநாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம். 9

வேண்டுதல்

சிவனார் மகன் சிரசினை காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணினைக் காக்க
நாரணன் பாலன்நாசியைக் காக்க. 10

இருமூர்த்தி மைந்தன்என் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
ப்ம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜியன் நாவினைக் காக்க. 11

கலியுக வரதன்என் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பிஎன் குரலவளைக் காக்க
புஷ்கலை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க. 12

வீரமணிகண்டன் விரல்களைக் காக்க
கடிலை மைந்தன் கைகளைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க. 13

முழுமுதற் கடவுள்என் முதுகினைக் காக்க
இருமுடிப் பிரியன்என் இடுப்பினைக் காக்க
பிரம்மாயுதன்என் பிட்டங்கள் காக்க
தர்மசாஸ்தா துடைதனைக் காக்க. 14

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதிஎன் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜய குமாரன் விரல்களைக் காக்க. 15

அன்னதானப் புரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்காவு ஜோதி அன்புடன் காக்க
காட்டாளருபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க. 16

மாலின் மகனார் அனுதினம் காக்க
அரிகர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க. 17
அரியின் மகனார் அனுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இட்ப்புறம் காக்க. 18

காக்க காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க என் பாவம் பொடிபட
இமையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க. 19

கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும்
குருதியைக் குட்டிக்கும் திஷ்டப் பேய்களும்
சாந்தமலை தனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய். 20

பில்லி சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய். 21

வாதம், பித்தம், சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும், வலிப்பும், சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணு காமல்
என்றுமே காப்பாய் எடுமேலி தேவா 22

கல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா. 23

காமம், குரோதம், லோபம் மோகம்
மதமாச்சர்ய மெனும் ஜம்பெரும் பேய்கள்
என்றுமே என்னை அணுகி விடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய் 24

சூது, பொறாமை, பொய், கோபமில்லாமல்
சோரம், லோபம், தின்மார்க்கம் இல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய். 25

மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தெனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன் திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே. 26


நம்ஸ்காரம்

அரிகரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ 27

பொன்னம்பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
சுரிகா யுத்முடைச சுந்த்ரா நமோ நமோ
மஹிஷி மாத்தனா மணிகண்டா நமோ நமோ 28

சரணம் சரணம் சபரி கிரிசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம் 29


சுவாமியே சரணம் ஐயப்பா......

11/17/2009

மாலை அணிந்த பிறகு தினசரி சொல்ல வேண்டிய 108 சரணங்கள்


ஸ்ரீ தர்ம சாஸ்தா 108 சரண கோஷங்கள்ஓம் சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கன்னிமூல கணபதியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அரிகர சுதனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் இன் தமிழ் சுவையே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திரு மகனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் சரணம் ஐயப்பா (10)
ஓம் உண்னம பரம் பொருளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் எங்கள்குல தெய்வமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஏனழப் பங்காளனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமேனியே சரணம் சரணம் ஐயப்பா (20)
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஒளதடங்கள் அருள்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் செளபாக்யம் அளிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சிவன் மால் திருமகனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் சரணம் ஐயப்பா (30)
ஓம் குளத்துப்புழை பாலகனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் வீரமணி கண்டனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பந்தள் மாமணியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம் நிறைமெய் பொருளே சரணம் சரணம் ஐயப்பா (40)
ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சனை அளித்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் வன்புலியின் வாகனனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் இருமுடிப் பிரியனே சரணம் சரணம் ஐயப்பா (50)
ஓம் எரிமேலி சாஸ்தாவே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நித்திய பிரமச் சாரியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நீல வஸ்திர தாரியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பெரும் ஆனவற்றை அழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பேருர்தோடு தரிசனமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் சரணம் ஐயப்பா (60)
ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனைப் பிரியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறை கோட்டையே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சி பாறை கோட்டையே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கரிவலந் தோடே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் சரணம் ஐயப்பா (70)
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் திருவேணி சங்கமமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் திரு இராமர் பாதமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதி திரு ஒளியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் சரணம் ஐயப்பா (80)
ஓம் திரு பம்பையின் புண்ணியமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்மே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நிறை உள்ளம் தருபவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அப்பாசி மேடே சரணம் சரணம் ஐய்ப்பா
ஓம் இப்பாசி குழியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா (90)
ஓம் பதினெட்டாம் படியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சன்னதியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பரவச பேரூர்ண்மே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர பிரியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நாகராஜா பிரபுவே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தொழனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் இருமுடிப் பிரியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி சாஸ்தாவே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நித்திய பிரமச் சாரியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நீல வஸ்திர தாரியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பெரும் ஆனவற்றை அழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பேருர்தோடு தரிசனமே சரணம் சரணம் ஐயப்பா (108)
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அழுதமாலை ஏற்றமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனைப் பிரியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறை கொட்டையே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சி பாறை கொட்டையே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கரிவலந் தோடே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்ப்வனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் திருவேணி சங்கமமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் திரு இராமர் பாத்மே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதி திரு ஒளியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஓழிப்பவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் திரு பம்பையின் புண்ணியமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நிறை உள்ளம் தருபவனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அப்பாட்சி மேடே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் இப்பாட்சி குழியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சன்னதியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பரவச பேரூர்ணமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய் அபுஷேகமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர பிரியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் நாகராஜா பிரபுவே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் மாளிகபுறத்து அம்மனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அக்னி குண்டமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் சரணம் ஐயப்பா (156)


சுவாமியே சரணம் ஐயப்பா .........