தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

12/15/2009

|| 108 உபநிஷத்ஸார : ||


|| 11.ப்ரஹ்மோபநிஷத் ||ஓம் ஸஹநாவது |
ஸஹநெள புநக்து | ஸஹவீர்யம் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீதமஸ்து |
மா வித்விஷாவஹை |ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

ஒம் (குருசிஷ்யர்களாகிய) எங்களை இருவரையும் சேர்த்து (பிர்ம்மம்)
காப்பாற்றட்டும். எங்களை இரு வரையும் சேர்த்துப் போஷிக்கட்டும். நாங்கள் இருவரும்
சேர்ந்து வீரியத்துடன் உழைப்போமாக. எங்கள் அத்தியயனம் கூர்மையுள்ளதாகவும் பிரகாசமுள்ளதாகவும்ஆக வேண்டும். (ஒருபோதும் நாங்கள் ஒரு வரையொருவர்) துவேஷிக்காமலிருக்க வேண்டும்.
ஒம் முவ்வகையிலும் சாந்தி நிலவுக |

அதாஸ்ய புருஷஸய சத்வாரி ஸ்த்தானானி பவந்தி நாபிர்ஹ்ருதயம்
கண்டம் மூர்த்தா ச |தத்ர சதுஷ்பாதம் ப்ரஹ்ம விபாதி ஜாகரிதே ப்ரஹ்மா
ஸ்வப்னே விஷ்ணு: ஸுஷுப்தெளருத்ரஸ்துரீய -மக்ஷரம் | ஸ ஆதித்யோ
விஷ்ணுச் சேச்வரச்ச ஸ்வய-மமனஸ்க-மஸ்ரோத்ர-மபாணி
பாதம் ஜ்யோதிர்-விதிதம் ||

1. (உடலில் உறையும்) இந்த புருஷனுக்கு (முக்கியமான) இடங்கள் நான்கு ஆகும் - தொப்பூழ், இருதயம்,கழுத்து, உச்சி என்று. இவற்றில் நான்கு பாதங்களை உடைய பிரம்மம் பிரகாசிக்கிற்து - விழிப்பில் பிரம்மா,கனவில் விஷ்ணு, உற்க்கத்தில் ருத்ரன், (அதற்கப்பால் நாலாவது) துரியத்தில் அக்ஷரப்ரஹ்மம். அந்தப்பரமபுருஷனே சூரியனும், எங்கும் வியாபித்த விஷ்ணுவும். உலகையாளும் ஈசுவரனும். அவன் மனதில்லாமல்(நினைப்பவனாகவும்) காதில்லாமல் (கேட்பவனாகவும்) கை கால்களில்லாமல் (செயல்புரிபவனாகவும்) சுயஞ்ஜோதி
ஸ்வரூபமாக உள்ளவன் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவன்.

யத்ர லோகா நலோகா தேவா ந தேவா யஜ்ஞா ந யஜ்ஞா மாதா ந மாதா
பிதா ந பிதா ஸ்நுஷா ந ஸ்நுஷா சாண்டாலோ ந சாண்டால:
பெளல்கஸோ ந பெளல்கஸ: ஸ்ரமணோ ந ஸ்ரமண: தாபஸோ ந தாபஸ ஏகமேவதத்
பரப்ரஹ்ம விபாதி நிர்வாணம் || 2 ||

2. எங்கு உலகம் உலகமா யில்லையோ, தேவர்கள் தேவர்களாக இல்லையோ, யக்ஞங்கள் யக்ஞங்களாகஇல்லையோ, தாய் தாயாக இல்லையோ, தந்தை தந்தையாயில்லையோ, மருமகள் மருமகளாக இல்லையோ,சண்டாளன் சண்டாளனாக இல்லையோ, பிரதிலோம ஜாதியான பெளல்கஸன் பெளல்கஸனாக இல்லையோ,துறவி துறவியாக இல்லையோ, தவசி தவசியாக இல்லையோ, எல்லாம் ஒன்றேயான பரப் பிரம்மமாக விளங்குகிறதோஅது நிர்வாணம் என்ற நிலை.


ந தத்ர தேவா ருஷய: பிதர ஈசதே ப்ரதிபுத்த: ஸர்வவிதிதி || 3 ||

3. அங்கு தேவர்களோ ருஷிகளோ பிதிருக்களோ இல்லை. (உலகங்களிலிருந்து) விழித்துக் கொண்ட ஞானி வல்லமையுடன்அங்கு விளங்குகிறான். அவன் எல்லாமறிந்தவன்.


ஹ்ருதிஸ்த்தா தேவதா : ஸர்வா ஹ்ருதி ப்ராணா :
ப்ரதிஷட்டிதா: |ஹ்ருதி ப்ராணச்ச ஜ்யோதிச்ச
த்ரிவ்ருத் ஸூத்ரஞ்ச தத்விது : || சைதன்யே திஷ்ட்டதி || 4 ||

4. எல்லா தேவதைகளும் இருதயத்தில் இருக்கிறார்கள். பிராணன்கள் இருதயத்தில் நிலைபெறுகின்றன. இருதயத்தில்தான் உயிர்நிலையும் ஞான ஒளியும். அதுதான் முப்புரிப்பூணூல் என்று ஞானிகள் அறிகிறார்கள். பரமாத்மா இருதயத்தில் தெய்வமாகவும் பிராணணாகவும் அறிவாகவும் உறைகிறது.


யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதேர்
யத் ஸஹஜம் புரஸ்தாத் | ஆயுஷ்ய - மக்ர்யம்
ப்ரதிமுஞ்ச சுப்ப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ்: || 5 ||

5. பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும்போதே அவருடன் தோன்றியதும்,ஆயுளையும் முதன்மையையும் அளிக்கவல்லதுமாகிய வெண்மையான் பூணூலை தரிக்கிறேன். ஞானஒளியும்பலமும் அதனால் நிலைபெறவேண்டும்.(இது யக்ஞோபவீதம் புதிதாகத்தரிக்ரும்போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்.)


ஸசிகம் வபநம் க்ருத்வா ப்ஹி : ஸூத்ரம்
த்யஜேத்புத :| யதக்ஷரம் பரம் ப்ரஹ்ம
தத்ஸூத்ரமிதி தாரயேத் || 6 ||

6. குடுமியுடன் தலைமயிரை மழித்து வெளிப்பூணூலை ஞானி விலக்கிவிடவேண்டும்.
எது அழியாத பரப்பிரம்மமோ அதை ஸூத்ர மெனப்பட்ட பூணூலாகத் தரிக்கவேண்டும்.
(நூலில் மணிகள் கோக்கப்பட்டாற்போல் பிரம்மத் திடம் உலகனைத்தும் கோக்கப்பட்டிருப்பதால் பிரம்மம்ஸூத்ராத்மா என்ப்படும். 'மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ' என்பது கீதை 7.7)


ஸூசனாத் ஸூத்ர - மித்யாஹு: ஸூத்ர நாம
பரம்பதம் | தத்ஸூத்ரம் விதிதம் யேந ஸ
விப்ரோ வேதபாரக || 7 ||

7.ஸூசனை செய்வதால் அதாவது சுட்டிக் காட்டுவதால் அதை ஸூத்ரம் என்று கூறுகின்றனர். ஸூத்ரம்குறிப்பிடுவது (ஒப்புயர்வற்ற) பரமபதம். அந்த ஸூத்ரம் எவனால் அறியப்பட்டதோ அவனே வேதத்தின்கரை கண்ட பிராம்மணனாவான்.

யேந ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா
இவ | தத்ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித்
தத்வதர்சிவான் || 8 ||

8. சரட்டில் மணிநிறைகள் போல் இவ்வனைத்தும் எதில் கோக்கப்பட்டுள்ளதோ அந்தச்சரட்டை (ஸூத்திரத்தை)யோகத்தை அறிந்தவனும் உண்மையைக்கண்ட்வனுமான யோகி தரித்து கொள்ளட்டும்.

பஹி : ஸூத்ரம் த்யஜேத் வித்வான்
யோகமுத்தம-மாஸ்த்தித: | ப்ரஹ்மபாவ-மிதம்
ஸூத்ரம் தாரயேத் ய: ஸ சேதன: || 9 ||

9. சிறந்தயோகத்தில் நிலைபெற்ற ஞானியானவன் வெளிப்படையான பூணூலை விட்டுவிடட்டும். பிரம்மபாவனையாகிற இந்த ஸூத்திரத்தை (நூலை) எவன் தரிக்கிறானோ அவன் தான் அறிவாளி.

ஒப்பிடுக. ___

நூலுஞ்சிகையு நுவலிற் பிரம்மமோ நூலது காற்பாச நுண்சிகை கேசமா
நூலது வேதாந்த நுண்சிகை ஞானமா நூலுடையந்தணர் காண நுவலிலே
__ திருமந்திரம்

தாரணாத்தஸ்ய ஸூத்ரஸ்ய நோச்சிஷ்டோ
நாசுசிர்ப்பவேத் | ஸூத்ரமந்தர்க்கதம் யேஷாம்
ஜ்ஞானயஜ்ஞோபவீதினாம் | தே வை ஸூத்ரவிதோ
லோகே தே யஜ்ஞோபவீதின : || 10 ||

10. அந்த ஸூத்ரத்தை அணிந்தால் அது எச்சிலாகவோ அசுத்தமாகவோ போகாது.
ஞானப்பூணூலணிந்த எவர்களுடைய ஸூத்ரம் உள்ளே போய் விட்டதோ அவர்களே
உலகில் ஸூத்திரத்தின் ரக்சியத்தை உணர்ந்தவர்கள். அவர்களே உலகில் உண்மையான
பூணூலணிந்தவர்கள்.


ஜ்ஞானசிகினோ ஜ்ஞாந்நிஷ்ட்டா
ஜ்ஞானயஜ்ஞோபவீதின: | ஜ்ஞான-மேவ பரம்
தேஷாம் பவித்ரம் ஜ்ஞான-முச்யதே || 11 ||

11. ஞானமே சிகையாகவும், ஞானமே பூணுலாகவும் உடையவர்கள் ஞானத்தில் நிலைபெற்றவர்கள்.
அவர்களுக்கு ஞானத்தைவிட உயர்ந்த தொன்றுமில்லை. ஞான்ந்தான் புனிதத்தன்மையளிப்பதாகக்கூறப்படுகிறது.

அக்னேரிவ சிகா நான்யா யஸ்ய ஜ்ஞானமயீ சிகா | ஸ
சிகீத்யுச்யதே வித்வாந் நேதரே கேசதாரிண: || 12 ||

12. அக்னியைப்போன்ற ஞானசிகையல்லாது மற்றது சிகையாகாது. எவனிடைய சிகை ஞானமயமானதோ
அந்த அறிவாளியே சிகையுடையவனாகக் கூறப்படுவான்; கேசத்தைத் தரிக்கும் மற்றவர்களல்லர்.

கர்மண்யதிக்ருதா யே து வைதிகே ப்ராஹ்மணாதய :| தேபிர்த்தார்யமிதம் ஸூத்ரம்
க்ரியாங்கம் தத்தி வை ஸ்ம்ருதம் || 13 ||

13. வைதீக கர்மங்களில் அதிகாரமுடைய பிராம்மணர் முர்ஹலிய எவர்கள் உண்டோ
அவர்களால் கருமத்திற்கு அங்கமாக இந்தப்பூணூல் அணியப்படவேண்டும் என்பது
தான் தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டதாகும்.

சிகா ஜ்ஞான்மயீ யஸ்ய உபவீதஞ்ச தன்மயம் |
ப்ராஹ்மண்யம் ஸகலம் தஸ்ய இதி ப்ரஹ்மவிதோ விது : || 14 ||

14. எவனுடைய சிகை ஞானமயமானதோ, பூணுலும் அப்படியே ஞான்மயமானதோ
அவனுக்கு பிராம்மணத்துவம் முழுதும் சித்திக்கும் (வேதம் முழுவதிற்கும் அதிகாரம்)
என்று வேதத்தை அறிந்தவர்கள் உணர்ந்தார்கள்.

இதம் யஜ்ஞோபவீதம் து பரமம் யத்பராயணம் | , ஸ வித்வான் யஜ்ஞோபவீதீ
ஸ்யாத் ஸ யஜ்ஞஸ்-தம் யஜ்வினம் விது: || 15 ||

15. இந்தப்பூணூலே சிறந்ததும், நாடியடையத்தக்கதுமாகும். அதை அறிந்தவனே
யக்ஞோபவீதமணிந்தவனாவான். அவனே யக்ஞமும் யக்ஞம் செய்பவனும் என்று
அறிவாளிகள் உணர்ந்தார்கள்.

ஏகோ தேவ: ஸர்வபூதேஹ்ஷு கூட: ஸர்வவ்யாபீ ஸர்வபூதாந்தராத்மா |
கர்மாத்த்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ்: ஸாக்ஷு சேதா கேவலோ
நிர்க்குணச்ச || 16 ||

16. (ஞானமாவது) தெய்வம் ஒன்றே, அது எல்லா உயிர்களுள்ளும் மறைந்துளதுஎங்கும் நிறைந்தது, எல்லாப்பிராணிகளுக்கு
அந்தராத்மாஎல்லாசெயல்களையும்மேற்பார்செய்வதுஎல்லாப்பொருள்களுக்கும் அடிப்படையாவசிப்பதுஸாக்ஷியாயிருப்பது,அறிவாயிருப்பது, தாந்தானாக விளங்குவது, குணங்களைக் கடந்தது.

ஏகோ வசீ ஸர்வபூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய : கரோதி |
தமாத்மஸ்த்தம் யேsனுபச்யந்தி தீராஸ்-தேஷாம் ஸுகம் சாச்வதம்
நேதரேஷாம் || 17 ||

17. எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மாவாகவும் அனைத்தையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவனாகவும் உள்ள ஒருவனும், ஒரே ரூபத்தைப்பலவாகச் செய்பவனும் எவனோ, அவனைத்தங்களிடமேஇருப்பவனாக எந்த தீராகள் தொடர்ந்து காண்கிறார்களோ அவர்களுக்கே அழியாத சுகம் உண்டு, பிறர்க்கில்லை.

ஆத்மானமரணிம் க்ருத்வா ப்ரணவஞ்சோத்தராரணிம் | த்த்யான
நிர்மதனாப்ப்யாஸாத் -தேவம் பச்யேந் நிகூடவத் || 18 ||

18. ஆத்மாவைக்கீழ் அரணியாகவும், ப்ரணவம் எனும் ஒங்காரத்தை மேல் அரணியாகவும்
செய்து கொண்டு தியான்மாகிற கடைதலை அப்பியாசம் செய்து மறைந்திருந்த அக்னியை வெளிக் காண்பதுபோல் பரமாத்மாவைக் காணவேண்டும்.

திலேஷு தைலம் ததனீவ ஸர்ப்பிராப : ஸ்ரோத : ஸ்வரணீஷு சாக்னி :|
ஏவமாத்மாத்மாத்மனி ஜாயதேsஸெள ஸத்யேனைனம் தபஸா யோsனுபச்யதி || 19 ||

19. ஸத்தியாத்தாலும் தவத்தாலும் எவன் தொடர்ந்து பார்க்கிறானோ அவனுடைய
உள்ளத்தில் எள்ளில் மறைந்திருந்த எண்ணெய் போலவும், ஆற்றில் இருந்த நீர்போலவும்,
அரணிக்கட்டைகளிலிருந்த நெருப்புப் போலவும் ஆத்மா வெளித்தோன்றுகிறது.

ஊர்ணநாபிர் யதா தந்தூன் ஸ்ருஜதே ஸம்ஹரத்யபி | ஜாக்ரத் ஸ்வப்நே ததா ஜீவோ கச்சத்யாகச்சதே புன: || 20 ||

20. சிலந்திப்பூச்சி எவ்வாறு நூலை உண்டாக்கி மீண்டும் தனக்குள்ளே இழுத்துக் கொள்ளுகிறதோ அவ்வாறேஜீவன் விழிப்பிலும் உறக்கத்திலும் (வெளிஉலகிற்கு) வருகிறான், மறுபடி திரும்பி (உள்ளே) போகிறான்.

நேத்ரஸ்த்தம் ஜாகரிதம் வித்யாத் கண்டே ஸ்வப்னம் ஸமாவிசத் | ஸுஷுப்தம்
ஹ்ருதயஸ்த்தம் து துரீயம் மூர்த்த்னி ஸம்ஸ்த்திதம் || 21 ||

21. (ஜீவன்) ஜாக்ரத்தில் கண்ணில் இருப்பதாகவும் ஸ்வப்னத்தில் கழுத்தில் உறைவதாகவும் ஸுஷுப்தியில் இருதயத்தில் உள்ளதாகவும் துரீயத்தில் தலை உச்சியில் நிலைபெற்றதாகவும் அறியவேண்டும்.

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸாஸஹ | ஆனந்த -மேதஜ்ஜீவஸ்ய
யஜ் ஜ்ஞாத்வா முச்யதே புத :|| 22 ||

22. எந்த நிலையை (எட்டிப்பிடிக்க முடியாமல்) மனதுடன் கூட வாக்கும் திரும்பி விடுகிறதோ
அதுதான் ஜீவனுடைய (பரிபூர்ண) ஆன்ந்தநிலை. அதை உணர்ந்து புத்திமான் முக்தனாகிறான்.

ஸர்வவ்யாபின-மாத்மானம் க்ஷீரே ஸர்ப்பிரிவாஸ்த்திதம் |
ஆத்ம-வித்யா தபோமூலம் தத் ப்ரஹ்மோபநிஷத் பதம் |
தத்ப்ரஹ்மோ பநிஷத்பதமிதி || 23 ||

23. பாலில் வெண்ணெய்போல் எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மாவை ஞானத்தாலும்
தவத்தின் மூலமாகவும் (அறிய வேண்டும்). அதுதான் பிரம்மோப்நிஷத்தால் அடையவேண்டிய
பதவி. அதுதான் ப்ரம்மோபநிஷத்தால் அடையவேண்டியபதம் எனப்பூர்த்தி.

_________________________

உபநிஷத்தின் விஷயச்சுருக்கம்


உடலில் நான்கு இடங்களில் பரமாத்மாவை நான்கு வடிவில் - கொப்பூழில் விழிப்பு நிலையில்
பிரம்மாவாகவும், இருதயத்தில் கனவு நிலையில் விஷ்னு வாகவும், கழுத்தில் உறக்க நிலையில்
ருத்ரனாகவும், தலை உச்சியில் துரீயஸமாதியில் அக்ஷரப்பிரம்மமாகவும் - தியானிக்கவேண்டும்.
அந்த்ப்பரமபுருஷன் மனதில்லாமல் நினைப்பவனாகவும், காதில்லாமல் கேட்பவனாகவும், கை கால்
களில்லாமல் செயலபுரியவனாகவும், எங்கும் வியாபித்தவனாகவும் ஸ்வயஞ்ஜோதிஸ்வரூபமாகவும் உள்ளவன்.

நாலாவது நிலை நிர்வாணம் எனப்படுவது, அங்கு உலகம் உலகமாட்யில்லை, தேவர்கள் தேவர்களாக இல்லை, மனிதர்கள் மனிதர்களாக இல்லை, எல்லாம் ஒன்றேயான் பரப்பிரம்மமாக விளங்குகிறது. உலகக் கனவிலிருந்து விழித்துக்கொண்ட ஞானி அந்நிலையில் ஸர்வவல்லமை உள்ளவனாக விளங்குகிறான்

பரமாத்மாவே தெய்வமாகவும் பிராணனாகவும் அறிவாகவும் எல்லோருடைய உள்ளத்திலும் விள்ங்குகிறது. இதைக்குறிப்பிடுவதற்காகத்தான் மூன்று இழைகளை உடைய பூணூலை விட்டுவிட்டு பிரம்மபாவனையாகிற பூணூலை ஞானியானதுறவி அணிகிறான். அந்தப்பூணூல் ஒரு பொழுதும் அசுத்தமாகப்போகாது. ஞான்மே சிகையாகவும் ஞான்மே பூணூலாகவும் உடையவர்கள் சிறப்புடையவர்கள். ஞாந்த்தைப்போல் புனிதத்தன்மை அளிக்கக் கூடியது வேறொன்றுமில்லை. அவனுக்கு பிராம்மணத்துவம் முழுதும் சித்திக்கும் (வேதம் முழுவதிற்கும் அதிகாரம்) என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஞானசித்தியாவது எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மாவாகவும் அனைத்தையிம் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பவனாகவும் உள்ள ஈசுவரனை உள்ளத்தில் காண்ப்தேயாம். அப்படிக்காண்பவர்களுக்கே அழியாத சுகம் உண்டு, பிறர்க்கில்லை.

ஸத்தியத்தையும் தவத்தையும் கைக்கொண்டு முயல்பவர்களுக்கு எள்ளில் மறைந்திருந்த் எண்ணேய் போலவும், தயிரில் மறைந்திருந்த் வெண்ணெய்போலும், அரணிக்கட்டையில் மறைந்திருந்த நெருப்புப் போலும் ஸாதனையின் பயனாக மறைந்திருந்த ஆத்மா வெளித்தோன்றும், அந்த ஆத்மஸாக்ஷாத்காரம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத ஆன்ந்த நிலை, அதை உணர்ந்து புத்திமான் முக்தனாகிறான். அதுதான் பிரம்மோபநிஷத்தால் அடைய வேண்டிய பதவி.
இங்ஙனம் பிரம்மோபநிஷத்து முற்றும்.
______________________

No comments: