தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

12/25/2009

12. கைவல்யோபநிஷத்து


கைவல்யோபநிஷத் || 12 ||

ஒம் ஸஹ நாவலது | ஸஹ நெள புனக்து |
ஹை வீர்யம் கரவா வஹை | தேஜஸ்விநா
வதீதமஸ்து மா வித்விஷாவஹை |
ஒம் சாந்தி : சாந்தி : சாந்தி : ||

12. கைவல்யோபநிஷத்து

ஒம் (குருசிஷ்யர்களாகிய எங்களை) இருவரையும் சேர்த்து
(பிரம்மம்) காப்பாற்றட்டும்; சேர்ந்துப்போஷிக்கட்டும்.
இருவரும் சேர்ந்து வீரியத்துடன் உழைப்போமாக. எங்கள்
அத்தியயனம் ஒளி பொருந்தியதாக வேண்டும். (நாங்கள் ஒருவரை யொருவர்)
பகைத்துக்கொள்ளாமலிருக்க வேண்டும்.
ஒம் முவ்வகையிலும் சாந்தி நிலவுக !

உபநிஷத்தின் பெயரும் தொடர்பும்

இவ்வுபநிஷத்து கிருஷ்ண யஜீர்வேதத்தைச் சேர்ந்தது என்று முக்திகோபநிஷத்தில் கூற்ப்பட்டுள்ளது.இதில் பிரம்மவித்தை ஆச்வலாயனருக்கு பிரம்மாவால் உபதேசிக்கப்படுகிறது. ஸ்ரீசங்கராசாரியார் பத்து உபநிஷதங்களுக்கு மட்டும் பாஷ்யம் எழுதியிருந்த போஒதிலும் வேறு சில உபநிஷதங்களை முக்கியமாகக் கையாளுகிறார். அவற்றுள் ஒன்று கைவல்யோபநிஷத்து. 'கைவல்யம்' என்பது ஸ்வரூபப்ரதிஷ்டா அல்லது தான் தானாயிருத்தல். 'முக்திர்- ஹித்வா sன்யதா ரூபம் ஸ்வரூபேண வ்யவஸ்திதி :' என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது. அந்தக் கைவல்யநிலை எய்துதற்கு வழி கூறுவதால் இவ்வுபநிஷத்து, கைவல்யோபநிஷத்து எனப்பெயர்பெற்றது.

ப்ரதம : கண்ட : முதல் கண்டம்

ஒம் அதாச்வலாயனோ பகவந்தம்
பரமேஷ்டின-முபஸமேத்யோவாச |
அதீஹி பகவன் ப்ரஹ்ம வித்யாம்
வரிஷ்டாம் ஸதா ஸத்பி: ஸேவ்ய-
மானாம் நிகூடாம் || 1.1 ||

1.1 அதன்மேல் ஆச்வலாயனர் பகவான் பிரம்மாவை
அணுகிப் பின்வருமாறு கூறலானார் :-

பகவானே! சிறந்ததும், எப்போதும் நல்லோர்களால்
நாடப்பெற்றதும், மறைவாயுள்ளது மான பிரம்ம வித்டதையை
உபதேசித்தருளும்.

1.1 அத - அதன்மேல் - அதாவது (நித்யாந்த்யவஸ்து விவேகம்)
நிலையுள்ளதும் நிலையற்றதுமான பொருள்களைப்பற்றிய பகுத்தறிவு;
(இஹாமுத்ரார்த்த பல போக விராகம்) இவ்வுலகங்களிலும் மரணத்தி
ற்குப்பின் மேலுலகங்களிலும் கர்மத்தின் பயனாக ஏற்படும் இன்ப
நுகர்ச்சிகளில் பற்றின்மை, (சமாதிஷட்கஸம்பத்தி :) சமம் தமம் உபரதி,
திதிக்ஷை சிரத்தை ஸமாதானம் என்ற ஆறுவகையான ஞானச்செல்வம்;
(முமுக்ஷுத்வம்) முக்தியில் அவா ஆகிய இந்நான்கு ஸாதனங்களும்
கூடியதற்குமேல்.

தஸ்மை ஸ ஹோவாச பிதாமஹச்ச.
ஸ்ரீஅத்தா -பக்தி -த்யான -யோகா -தவைஹி || 1.2 ||


1.2 பாட்டனாராகிய பிரம்மா 'சிரத்தையாலும் பக்தியாலும்
தியான் யோகத்தாலும் அதை அடைவாயாக' என்று
அவருக்குக் கூறினார்.

1.2 பாட்டனார் - உலகை வளர்த்த பிரஜாதிகளுக்குப் பிதா
வாகிய பிரம்மாவைப் பாட்டனார் எனக் கூறுவது வழக்கம்.

ந கர்மணா ந ப்ரஜயா தனேன த்யாகேனைகே அம்ருதத்வ-
மானசு:| பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜதே
யத்யதயோ விசந்தி || 1.3 ||

1.3 கருமத்தாலன்று, மக்களாலன்று, செல்வத்தாலன்று,
தியாகத்தாலேயே சிலர் சாகாநிலையை எய்தியுள்ளானர்.
யோகமுயற்சியுடையோர் எய்தும் அப்பதவி ஸ்வர்க்கத்தினும்
சிறந்தது, புத்திகுகையில் நிலைத்துப் பிரகாசிப்பதாகும்.

1.3 ந கர்மணா- இங்கு விலக்கப்பட்டது ஆசைவாய்ப்பட்டுச்
செய்யும் கர்மம். பயனில் பற்றற்று உலக நன்மைக்காகவும்
ஈசுவரார்ப்பணமாகவும் செய்யப்படும் கர்மம் ஞானத்திற்கு
ஸாதனம்.

வேதாந்த-விஜ்ஞான - ஸுநிச்சிதார்த்தா:
ஸந்ந்யாஸ- யோகாத்-யதய: சுத்தஸத்வா :|
தே ப்ரஹ்மலோகே து பராந்தகாலே
பராம்ருதா : பரிமுச்யந்தி ஸர்வே || 1.4 ||

1.4 செம்மையான வேதாந்த ஞானத்தால் நிச்சய புத்தி
உடையவர்களும், ஸந்நியாஸ யோகத்தால் பரிசுத்தமான
அந்தக்கரண முடையவர்களுமான துறவிகளாகிய அவர்கள்
எல்லோரும் பராம்ருதமாகிய பிரம்மத்தில் நிலை பெற்று
(ஜீவன் முக்தர்களாகவே வாழ்ந்து) அந்தியகாலத்தில்
(சரீரம் விழுந்தபின்) பற்றனைத்தினின்றும் அற்வே
விடுபடுகின்றனர்.

விவிக்த- தேசே ச ஸுகாஸனஸ்த்த : சுசி: ஸமக்ரீவ-
சிர: சரீர :| அந்த்யாஸ்ரீஅமஸ்த: ஸகலேந்த்ரியாணி
நிருத்ய பக்த்யா ஸ்வகுரும் ப்ரணம்ய || 1.5 ||

1.5 கடைசி ஆசிரமத்திலுள்ள ஸந்நியாஸியானவன்
த்னிமையான இடத்தில் சுகமான ஆசனத்திலமர்ந்து,
பரிசுத்தமானவனாய், கழுத்து, தலை, உடல் ஆகியவற்
றைச்சமமாய் நிறுத்தி, எல்லா இந்திரியங்களையும்
அடக்கி பக்தியுடன் தன் குருவை வணங்கி;

தமாதி -மத்யாந்த-விஹீனமேகம் விபும் சிதானந்த-
மரூப-மத்புதம் |உமா-ஸஹாயம் பரமேச்வரம்
ப்ரபும் த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம் |
த்யாத்வா முனிர்- கச்சதி பூதயோனிம் ஸமஸ்த
ஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் || 1.7 ||

1.7 ஆதியும் நடுவும் முடிவுமில்லாததும் ஒன்றேயாகிய
தும், எங்கும் நிறைந்ததும் அறிவும் ஆனந்தமுமே
வடிவாகியதும், வேறு வடிவற்றதும், அற்புதமானதும் ஆகிய
பரம்பொருளை பரம்சாந்தனும் நீலகண்டனும் முக்கண்ணனும்
உமாதேவியுடன் கூடியவனும் பிரபுவுமாகிய பரமேச்வரனாக
தியானித்து, உண்டாய உலகின் உற்பத்திஸ்தானமும், அனைத்திற்கும்
ஸாக்ஷியும், அறியாமையாகிற இருளைக்கடந்ததுமான நீலையை அம்
முனிவன் அடைகிறான்.

ஸ ப்ரஹ்மா ஸ சிவ: ஸேந்த்ர: ஸோs க்ஷர: பரம்:
ஸ்வராட் | ஸ ஏவ விஷ்ணு: ஸ ப்ராண: ஸ காலோ
sக்னி: ஸ சந்த்ரமா :|| 1.8 ||

1.8 அவனே பிரம்மா, அவனே சிவன், அவனே இந்திரன்,
அவனே அழிவில்லாதவன், உயர்ந்தவன், தன்னைத்தானே
யாள்பவன். அவனே விஷ்ணு, அவனே பிராணன், அவனே
காலன், அக்கினி, அவனே சந்திரன்.

ஸ ஏவ ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம்
ஸநாதனம் | ஜ்ஞாத்வா தம் ம்ருத்யு -
மத்யேதி நான்ய : பந்தா விமுக்தயே :|| 1.9 ||

1.9 உண்டானதும், உண்டாகப்போவதும், என்று
முள்ளதும், எல்லாமும் அவனே. அவனை அறிந்து
ஒருவன் சாவைக் கடந்து செல்லுகிறான். முக்திக்கு
வேறு வழியில்லை.

ஸர்வ -பூதஸ்த- மாத்மானம் ஸர்வ-
பூதானிசாத்ம்னி | ஸம்பச்யன் ப்ரஹ்ம பரமம்
யாதி நான்யேன ஹேதுனா || 1.10 ||

1.10 எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னிடம் எல்லா
உயிர்களையும் நன்கு கண்டுகொண்டு ஒருவன் பரப்பிரம்
மத்தையடைகிறான்; வேறு எக்காரணத்தாலும் அன்று.

ஆத்மான-மரணிம் க்ருத்வா ப்ரணவஞ்
சோத்தராரணிம் | ஜ்ஞான- நிர்மதனாப்யாஸாத்
பாபம் த்ஹதி பண்டித : || 1.11 ||

1.11 தன்னைக்கீழ் அரணிக்கட்டையாக்வும் பிரணவத்தை
(ஒங்காரத்தை) மேல் அரணிக்கட்டையாகவும் செய்து
ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து அறிவாளி
பாவத்தைச் சுட்டெரிக்கிறான்.

ஸ ஏவ மாயாபரிமோஹிதாத்மா சரீரமாஸ்தாய
சுரோதி ஸர்வம் | ஸ்த்ரியன்னபானாதி -விசித்ர-
போகைர் ஸ ஏவ ஜாக்ரத் பரித்ருப்திமேதி || 1.12 ||

1.12 மாயையால் மதியிழந்த ஜீவன் எவனோ அவனே
சரீரத்திலிருந்து எல்லாவற்றையும் செய்கிறான். ஸத்ரீ,
அன்னம், பானம் முதலிய பலவகைப்பட்ட போகங்களால்
அவனே விழிப்புநிலையில் திருப்தியை அடைகிறான்.

ஸ்வப்னே ஸ ஜீவ: ஸுகது:க்கபோக்தா ஸ்வமாயயா
கல்பித-ஜீவலோகே | ஸுஷுப்திகாலே ஸகலே விலீனே
த்மோsபிபூத: ஸுகரூபமேதி || 1.13 ||

1.13 கனவு நிலையில் அந்த ஜீவன் தனது மாயையால்
(அவித்தையால்) கல்பிக்கப்பட்ட ஜீவலோகத்தில் இன்ப
துன்பங்களை அனுபவிப்பவனாகிறான். உறக்க நிலையில்
அனைத்தும் ஒழிவடைந்தபோது அறியாமையாகிற இருளில்
ஆழ்ந்து இன்பவடிவை எய்துகிறான்.

புனச்ச ஜன்மாந்தர- கர்மயோகாத் ஸ ஏவ ஜீவ:
ஸ்வபிதி ப்ரபுத்த : | புரத்ரயே க்ரீடதி
யச்ச ஜீவஸ்தத: ஸுஜாதம் ஸகலம் விசித்ரம் ||
ஆதாரமானந்த - மகண்ட- போதம் யஸ்மின்லயம்
யாதி புரத்ரயஞ்ச|| 1.14 ||

1.14 மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டு
றவால் திரும்பத்திரும்ப அதே ஜீவன் தூங்கியும்விழித்தும்
முப்புரங்களிலும் (ஸ்தூல ஸுக்ஷ்ம காரண சரீரங்களில்)
விளையாடுகிறான். அவனிடமிருந்தே விசித்திரமான இவ்வனைத்தும்
தோன்றியுள்ளது. எவனிடத்தில் முப்புரங்களும் ஒடுங்குகின்றனவோ
அவன் தான் ஆதாரமாகவும், ஆனந்த மயனாகவும் பிளவுபடாத
அறிவின் விழிப்புடையவனாகவும் உள்ளவன் (ஆத்மா).

ஏதஸ்மாஜ் ஜாயதே ப்ரானோ மன: ஸாவேந்த்ரியாணி ச|கம் வாயுர்-
ஜ்யோதி-ராபச்ச ப்ருத்வீ விச்வஸ்ய தாரிணீ || 1.15 ||

1.15 இதிலிருந்தே பிராணனும், மனதும், எல்லா இந்திரியங்களும்,
ஆகாசமும், வாயுவும், அக்கினியும், அப்புவும், அனைத்தையும் தாங்கும்
பூமியும் உண்டாகின்றன.

யத்பரம் ப்ரஹ்ம ஸர்வாத்மா விச்வஸ்யாயதனம் மஹத் | ஸுக்ஷ்மாத் -
ஸுக்ஷ்மதரம் நித்யம் ஸ த்வமேவ த்வமேவ தத் || 1.16 ||

1.16 எது பரப்பிரம்மமோ, அனைத்திற்கும் ஆத்மாவோ, உலகிற்குப் பெரிய
இருப்பிடமோ, நுட்பத்திற்கும் அதிக நுட்பமானதோ, என்று முளதோ
அது நீயே, நீயே அது.

ஜாக்ரத்-ஸ்வப்ன-ஸுஷுப்த்யாதி - ப்ரபஞ்சம் யத்ப்ரகாசதே | தத்
ப்ரஹ்மாஹ- மிதி ஜ்ஞாத்வா ஸர்வபந்தை: ப்ரமுச்யதே || 1.17 ||

1.17 விழிப்பு, கணவு, உறக்கம் முதலிய பிரபஞ்சத்தை எது
பிரகாசிப்பிக்கிறதோ, 'அந்த பிரம்மம் நானே' என்று அறிந்து
(ஒருவன்) எல்லாக்கட்டுகளினின்றும் விடுபடுகிறான்.

த்ரிஷு தாமஸு யத்போக்யம் போக்தா போகச்ச
யத்பவேத் | தேப்யோ விலக்ஷண: ஸாக்ஷீ
சின்மாத்ரோ sஹம் ஸதாசிவ :|| 1.18 ||

1.18 மூன்று நிலைகளிலும் எது அனுபவிக்கப்
படுவதாகவும், எது அனுபவிப்பவனாகவும் அனுபவமாகவும்
ஆகின்றதோ, அவற்றினின்று வேறாகவும் ஸாக்ஷியாகவும்,
கேவல அறிவு வடிவினனாகவும், என்றும் மங்கள வடிவினன்
(ஸதா சிவன்) ஆகவும் உள்ளவன் நான்.

மய்யேவ ஸகலம் ஜாதம் மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் | மயி
ஸர்வம் லயம் யாதி தத் ப்ரஹ்மாத்வயமஸ்ம்யஹம் || 1.19 ||

1.19 என்னிடமிருந்தே அனைத்தும் உண்டாயிருக்கிறது, என்னிடமே
அனைத்தும் நிலைத்திருக்கிறது, என்னிடமே அனைத்தும் லயமடைகிறது.
இரண்டற்ற அந்த பிரம்மாக நான் இருக்கிறேன்.

தொடரும் உபநிஷத்ஸாரம்...
என்றும் அன்புடன்

No comments: