தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

12/29/2009

12. கைவல்யோபநிஷத்து ||

த்விதீய : கண்ட : இரண்டாவது கண்டம்

அணோ - ரணீயா- ஹைமேவ தத்வன்- மஹானஹம் விச்வமஹம்
விசித்ரம் | புராதனோsஹமீசோ ஹிரண்மயோsஹம் சிவ - ரூபமஸ்மி || 2.1 ||

2.1 அணுவுக்கும் அணுவானவன் நான்; அவ்வாறே பெரியவனும் நானே;
பலவகைப்பட்ட உலகும் நானே; நான் பழைமையானவன்; (உடல்களில் உறையும்)
புருஷ்ன் நான்; ஈசன் நான்; பொன்போலொளிர்பவன் நான்; மங்களவடிவினனாய்
நான்; மங்கள்வடிவினனாய் நான் இருக்கிறேன்.

அபாணி - பாதோsஹ - மசிந்த்ய-சக்தி : பச்யாம்ய
சக்ஷு: ஸ ஸ்ரீஉணோம்யகர்ண:| அஹம் விஜானாமி
விவிக்தரூபோ ந சாஸ்தி வேத்தா மம சித்ஸதாsஹம் || 2.2 ||

2.2 கைகளும் கால்களும் இல்லாத நான் நினைக்கொணாச்
சக்திபடைத்தவன்; கண்ணில்லாமல் காண்கிறேன்; அப்படிப்பட்ட
நான் காதில்லாமல் கேட்கிறேன். நான் அனைத்தையும் அறிகிறேன்;
(அனைத்தினின்றும்) வேறான் வடிவுடையவன்; என்னை அறிபவன்
எவனும் இல்லை; எப்போதும் நான் அறிவு வடிவினனே.

வேதை-ரனேகை-ரஹமேவ வேத்யோ வேதாந்த க்ருத்வேத்விதேவ
சாஹம் | ந புண்யபாபே மம நாஸ்தி நாசோ ந ஜன்ம தேஹேந்த்ரிய
- புத்தி - ரஸ்தி || 2.3 ||

2.3 அனேகவேதங்களால் அறியப்படவேண்டியவன் நானே;
வேதத்தைச் செய்தவனும் வேதத்தை உணர்ந்தவனும் நானே,
எனக்குப்புண்ணியமுமில்லை பாவமுமில்லை. அழிவுமில்லை
பிறவியுமில்லை. உடலும் இந்திரியங்களும் புத்தியும் இல்லை.

ந பூமிராபோ ந ச வஹ்னிரஸ்தி ந சாநிலோ மே
sஸ்தி ந சாம்பரஞ்ச || 2.4 ||

2.4 எனக்கு பூமியுமில்லை, நீருமில்லை, அக்கினியுமில்லை,
காற்றுமில்லை, ஆகாசமுமில்லை.

ஏவம் விதித்வா பரமாத்ம - ரூபம் குஹாசயம் நிஷ்கல -
மத்விதீயம் | ஸமஸ்த - ஸாக்ஷிம் ஸதஸத்விஹீனம்
ப்ரயாதி சுத்தம் பரமாத்ம ரூபம் || 2.5 ||

2.5 இருதய குகையில் உறைபவனும், பகுக்கப்படாதவனும்,
இரண்டற்றவனும், அனைத்திற்கும் ஸாக்ஷியும் காரியத்திற்கும்
காரணத்திற்கும் (உளதிற்கும் இலதிற்கும்) அப்பாற்பட்டவனும்,
ஆகிய பரமாத்மரூபத்தை இங்ஙனம் அறிந்து ஒருவன் பரிசுத்தமாகிய
பரமாத்மரூபத்தையே அடைந்து விடுகிறான்.

ய : சதருத்ரீயமதீதே ஸோ sக்னிபூதோ பவதி ஸ வாயுபூதோ
பவதி ஸ ஆத்ம பூதோ பவதி ஸஸுராபானாத்பூதோ பவதி
ஸ ப்ரஹ்மஹத்யா. பூதேர் பவதி ஸ ஸுவர்ணஸ்தேயாத்
பூதோ பவதி தஸ்மா- தவிமுக்த __ மாச்ரிதோ பவத்யத்யாச்ரமீ
ஸர்வதா ஸக்ருத்வா ஜ்பேத் || 2.6 ||

2.6 எவன் சதருத்ரீயத்தை அத்தியயனம் செய்கிறானோ அவன்
அக்னியால் பரிசுத்த மடைந்தவன் போலும் வாயுவால் பரிசுத்த
மடைந்தவன் போலும் ஆத்மாவால் பரிசுத்தமடைந்தவன் போலும்
ஆகிறான். அவன் மதுபான் தோஷத்தினின்று பரிசுத்தியடைகிறான்
பிரம்ம ஹத்திலினின்று பரிசுத்தியடைகிறான், பொன்னைத்திருடியதினின்று
பரிசுத்தியடைகிறான். அதனால் 'அவிமுக்தம்' எனும் பதவியை அடைகிறான்.
அத்யாச்ரமி எப்போதும் அல்லது (ஒவ்வொரு நாளும்) ஒரு தடவையாவது
ஜபிக்கவேண்டும்.

அனேன ஜ்ஞானமாப்னோதி ஸம்ஸாரார்ணவ நாசனம் | தஸ்மா -தேவம்
விதித்வைனம் கைவல்யம் பரமச்னுதே | கைவல்யம் பரமச்னு த இதி || 2.7 ||

ஒம் ஸஹநாவவது இதி சாந்தி : ||
|| இதி கைவல்யோபநிஷத் ஸமாப்தா ||

2.7 பிறவிக்கடலை அழிக்கும் (வற்றச்செய்யும்) ஞானத்தை இதனால்
ஒருவன் அடைகிறான். ஆகையால் இங்ஙன மிதையறிந்து ஒருவன் உயர்ந்த
கைவல்யத்தை (தான் தானாய்நிற்கும் முக்தியின்பத்தை) அனுபவிக்கிறான்.
உயர்ந்த கைவல்யத்தை அனுபவிக்கிறான் என்றவாறு.

ஒம் ஸ ஹ நாவது (குருசிஷ்யர்களாகிய எங்களை) இருவரையும் சேர்த்து
(பிரம்மம்) காப்பாற்றட்டும் __ என்று சாந்தி பாடம்.

2.6 சதருத்ரீயம் - ஸ்ரீருத்ரப்ரச்னம் : யஜுர்வேதம். கைவல்ய உபநிஷத்திற்கு
பாஷ்யம் எழுதியுள்ள நாராயணதீர்த்தர் என்பவர் இதை 'பரஹ்ம சதருத்ரீயத்தை
ஸகுணப் பிரம்ம உபாஸனை யென்றும் கைவல்ய உபநிஷத்திலுள்ளதை நிர்க்குணப்
பிரம்ம உபாஸனை என்றும் அவர் சொல்கிறார்.

அவிமுக்தம் - பிரளயத்திலும் உமாமஹேசுவரன் காசியை விட்டு நீங்காததால்
காசிக்கு அவிமுக்த க்ஷேத்ரம் எனப்பெயர். தேகத்தில் புருவமத்திக்கும் அவிமுக்தம்
எனப்பெயர். ஆறு ஆதாரசக்கரங்களில் இங்குள்ளது ஆக்ஞா சக்கரம். இங்கு மனது
நிலைக்கும் போது ஞானம் அனுபவத்திற்கு வருகிறது.

2.7 கைவல்யம் பலமச்னுதே


இங்ஙனம் கைவல்யோபநிஷத்து முற்றும்.


உபநிஷத்தின் விஷயச்சுருக்கம்

ஆச்வலாயனர் பிரம்மாவை அணுகிப் பிரம்ம வித்தையை உபதேசிக்கும்படி
கேட்டுக்கொண்டார். பிரம்மா உபதேசித்ததாவது : - சிரத்தையாலும் பக்தியாலும்
தியான யோகத்தாலும் அதை அடைய இயலும்; கருமத்தாலன்று, மக்களாலன்று,
செல்வத்தாலனறு; இவற்றின் தியாகத்தாலேயே சிலர் சாகா நிலையை எய்தியுள்ளனர்.
யோக முயற்சியுடையோர் எய்தும் அந்நிலை ஸ்வர்க்கத்தினும் சிறந்தது. ஒவ்வொருவர்
புத்தி குகையிலும் நிலைத்துப் பிரகாசிப்பதாம். செம்மையான் வேதாந்த ஞானத்தால்
நிச்சயபுத்தி உடையவர்களும் ஸந்நியாஸ யோகத்தால் பரிசுத்தமான அந்தக்கரண
முடையவர்களுமான துறவிகள் பராமிருத மாகிய பிரம்மத்தில் நிலை பெற்று ஜீவன்
முக்தர்களாகவே வாழ்ந்து சரீரம் விழுந்தபின் பற்றனைத்தினின்றும் அறவே விடுபடுகின்றனர்.
துறவியானவன் தனிமையான இடத்தில் சுகமான ஆஸனத்திலமர்ந்து பரிசுத்தமானவனாய்
கழுத்து, தலை, உடல் ஆகியவற்றைச் சமமாய் நிறுத்தி எல்லா இந்திரியங்களையுமடக்கி பக்தி
யுடன் தன் குருவை வணங்கி இருதயகமலத்தில் மாசற்றதும் பரிசுத்தமானதும் தெளிவானதும் துன்ப மற்றதும் சிந்தனைக்கெட்டாததும் வெளிப்படையாய்த் தோன்றாதெனினும் எண்ணற்ற வடிவுகளின் அடிப்படையாய் விளங்கு வதும் மங்களமும் சாந்தமும் நிறைந்ததும் அழிவற்றதும் பிரம்மாண்டங்களின் பிறப்பிடமாவதும் ஆதி நடுமுடிவில்லாததும் ஒன்றேயாகி எங்கும் நிறைந்ததும் அறிவும் ஆனந்தமுமே வடிவாகியதும் வேறு வடிவற்றாதும் அற்புத மானதுமாகிய பரம் பொருளைப் பரமசாந்தனும் நீலகண்டனும் முக்கண்ணனும் உமா தேவியுடன் கூடியவனும் பிரபுவுமாகிய பரமேசுவரனாக தியானித்து உண்டாகிய உலகின் உற்பத்திஸ்தானமும் அனைத்திற்கும் ஸாக்ஷியும் அறியாமையாகிற இருளைக்கடந்ததுமான நிலையை அடைகிறான்.
அவனே பிரம்மா, அவனே சிவன், அவனே இந்திரன், அவனே அழிவிலாதவன், உயர்ந்தவன், தன்னைத்தானே யாள்பவன்; அவனே விஷ்ணு, அவனே பிராணன், அவனே காலன், அக்கினி, சந்திரன்; உண்டானதும், உண்டாகப் போவதும், என்றுமுள்ளதும். எல்லாமும் அவனே. அவனையறிந்து ஒருவன் சாவைக்கடந்து செல்லுகிறான். முக்திக்கு வேறு வழியில்லை. எல்லா உயிர்களிலும் தன்னையும், தன்னிடம் எல்லா உயிர்களையும் நன்கு கண்டுகொண்டு ஒருவன்
பரப்பிரம்மத்தை அடைகிறான்; வேறு எக்காரணத்தாலு மன்று.

தன்னைக் கீழரணிக்கட்டையாகவும் பிரணவத்தைமேல் அரணிக்கட்டையாகவும் செய்து ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து அறிவாளி பாவத்தைச் சுட்டெரிக்கிறான். மாயையால் மதியிழந்தவன், ஸ்திரீ, அன்னம், பானம் முதலியவற்றில் இன்பந்தேடிக்கொண்டும், அதைப்பற்றியே கனவு கண்டு கொண்டும் காலத்தைக் கழிக்கிறான்.

எது பரப்பிரம்மமோ, அனைத்திற்கும் ஆத்மாவோ, உலகிற்குப் பெரிய இருப்பிடமோ, நுட்பத்திற்கும் அதிக நுட்பமானதோ, என்று முளதோ அந்த பிரம்மம் நானே என்று அறிந்து ஒருவன் எல்லாக் க்ட்டுக்ளினின்றும் விடுபடுகிறான். இங்ஙனம் ஒருவன் தான் தானாய்நிற்கும் கைவல்யமுக்தி இன்பத்தை அனுபவிக்கிறான்.


என்றும் அன்புடன்

தொடறும் உபநிஷம்....

________________

No comments: