தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

1/31/2010

மனத்தினால் நன்மையையே நினைப்போம்!நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் செய்யும் கெட்ட காரியம், வாயால் புரளிப் பேசுகிறோம், மனத்தினால் கெட்ட நினைவுகள்
கொள்கிறோம், பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்
பழகிக்கொள்ள வேண்டும்.

சம்பாதிப்பதற்கே பொழுதெல்லாம் போய் விடுகிறது, இதற்கெல்லாம் நேரம் ஏது
என்பீர்கள். சம்பாதிப்பது குடும்பஸ்தர்களுக்கு அவசையம் தான். ஆனால்
யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லையே!

வீண் பேச்சு, பிறரைக் கேலி செய்தல், வேடிக்கை பார்த்தல், நியூஸ் பேப்பர்
விமர்சனம் இவற்றில் எவ்வளவு நேரம் வீணாகிறது.

அந்த நேரத்தையெல்லாம் இறைவனைப் பற்றிய சிந்தனையில் செலவழிக்கலாமே! தனியாக நேரம் ஒதுக்காவிட்டாலும் பஸ்ஸிலோ ரயிலிலோ பாதுகாப்பான முறையில் அமர்ந்து பிரயாணிக்கும் போது இறைவனைப் இறைவனை தியானித்துச் செல்லலாமே!

ஏனென்றால் நாம் சம்பாதிக்கும் காசில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன் வராது.
மறு உலகத்திற்கான செலாவனி இறைவனின் நாமமும் இறைசிந்தனை மட்டும் தான்.

மனசு பகவானின் இடம். அதை குப்பைத்தொட்டியாக்கி வைத்திருக்கிறோம்.
அதை சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அதில் அமரவைத்து நாமும் அமைதியாக
அமைந்து விட வேண்டும்.

உலகமே மூழ்கிப்போனாலும் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். ஏனெனில் நிஜமாகவே உலகம் மூழ்கும் போதும் நமக்குக் கைகொடுப்பது இதுவே ஆகும்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆனால் நம்மைப் போன்ற குடும்பஸ்தர்களுக்கு மனதை கட்டுப்படுத்த எந்த
அளவுக்கு முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஜென் கதை
தான் ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.

மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.

மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.

நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்.

நான் இப்போதைக்கு இந்த அளவிற்குத் தான். நீங்கள் எப்படி?

என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

1/27/2010

உபநிஷத்து கதைகள்

இரண்டாவது கண்டம்


அதஹைநமத்ரி: பப்ரச்ச யாஜ்ஞவல்க்யம் |
ய ஏஷோ sவ்யக்த ஆத்மா தம் கதமஹம் விஜாநீயாமிதி |
ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய:| ஸோsவிமுக்த உபாஸ்யோ
ய ஏஷோsனந்தோ sவ்யக்த ஆத்மா ஸோ sவிமுக்தே
ப்ரதிஷ்ட்டித இதி || 2.1 ||

2.1 இந்த யாக்ஞவல்கியரை அத்ரி மஹரிஷி கேட்டதாவது அளவு கடந்ததாகவும் வெளிப்படையாய்த் தோன்றாததாகவும் உள்ள இந்த ஆத்மா எனப்படுவது எதுவோ அதை நான்
எவ்வாறு அறியக்கூடும்?
அக்கேள்விக்கு யாக்ஞவல்கியர் கூறிய விடை பின் வருமாறு அதற்கு அவிமுக்தம் என்பது உபாசிக்கப்பட வேண்டும், அளவு கடந்ததாகவும் வெளிப்படையாய்ந் தோன்றாததாகவும் உள்ள இந்த ஆத்மா எனப்படுவது எதுவோ அது அவிமுக்தத்தில் நிலை பெற்றுள்ளது என்று.

ஸோsவிமுக்த: கஸ்மின் ப்ரதிஷ்ட்டித இதி |
வரணாயாம் நாஸ்யாஞ்ச மத்த்யே ப்ரதிஷ்ட்டித இதி |
காவை வரணா கா ச நாஸுதி |
ஸர்வானிந்த்ரியக்ருதான் தோஷான் வாரயதீதி தேன
வரணா பவதீதி |
ஸர்வானிந்த்ரியக்ருதான் பாபாந்நாசயதீதி - தேன நாஸீ பவதீதி |
கதமஞ்சாஸ்ய ஸ்த்தானம் பவதீதி |
ப்பருவோர்க்க்ராணஸ்ய ச ய: ஸந்த்தி:
ஸ ஏஷ த்யெளர் லோகஸ்ய பரஸ்ய ச ஸந்த்திர்ப்பவதீதி |
ஏதத்வை ஸந்த்திம் ஸந்த்த்யாம் ப்ரஹ்மவித உபாஸத இதி |
ஸோsவிமுக்த உபாஸ்ய இதி |
ஸோsவிமுக்தம் ஜ்ஞான் - மாசஷ்டே யோ வைததேவம் வேதேதி || 2.2 ||

2.2 அந்த அவினுக்தம் எங்கே நிலையாக உள்ளது என்றால் 'வரணா' விற்கும் 'நாசி ' க்கும் மத்தியில் நிலையாயுள்ளது என்பது விடை. அந்த 'வரணா' எது, அந்த 'நாசி' எது என்றால்
இந்திரியங்களெல்லாம் செய்யும் பாவங்களை (வாரயதி) தடுக்கிறது என்பதால் அது 'வரணா' ஆகிறது; நாசம் செய்வதால் 'நாசி' ஆகிறது. அதினுடைய ஸ்தானம் எது என்றால் புருவங்களும் நாசியும் கூடும் இடம் எதுவோ அது; அதுவே இந்த உலகிற்கும் மேலுலகிற்கும் ஸந்தியாகிய
வானம் ஆகும். இந்த ஸந்தியையே பிரம்ம வித்துக்கள் ஸந்தியா வந்தனத்தில் உபாசிக்கின்றனர். அப்படிப்பட்ட அவிமுக்தம் உபாசிக்கப்படுதல் வேண்டும். எவர் இங்ஙனம் அதை அறிந்தவரோ அவரே அவிமுக்தத்தைப் பற்றிய ஞானத்தை ஞானத்தை உபதேசிப்பார்.

அவிமுக்தம் - விசுவநாதன் உறையும் காசிக்ஷேத்ரம் வாராணஸீ என்றும்
அவிமுக்தம் என்றும் கூறப்படும். அது எல்லாப் பாவங்களையும் போக்கும்
க்ஷேத்ரம். அது நமது உடலில் புருவ மத்தியில் உளதாக அறிந்து தியானிக்க
வேண்டும். அதுதான் ஞானிகளின் ஸந்தியாவந்தனம்.

_________________________________

மூன்றாவது கண்டம்

அத ஹைநம் ப்ரஹ்மசாரிண ஊசு: |
கிம் ஜப்யேனாம்ருதத்வம் ப்ரூஹீதி |
ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய: | சதருத்ரீயேணேதி |
ஏதான்யேவ ஹ வா அம்ருதஸ்ய நாமதேயானி |
ஏதைர்ஹ வா அம்ருதோ பவதீதி |

இவரை (யாக்ஞவல்கியரை) அவருடைய சீடர்களான பிரம்மசாரிகள் கேட்டதாவது: எதை ஜபம் செய்வதால் ஒருவன் அம்ருதத்வம் அல்லது சாகாநிலை எனும் முக்திப் பதவியை எய்துவான் என்பதை உபதேசியுங்கள் என்று. யாக்ஞவல்கியர் கூறியதாவது: சதருத்ரீய ஜபத்தால் என்று. (ருத்ரத்தில் அடங்கிய நூற்றுக்கணக்கான சிவநாமங்களாகிய) இவையே சாகாத தன்னையின்
நாமதேயங்கள். அவற்றை ஜபிப்பதாலேயே நிச்சயமாக ஒருவன் சாகாநிலை எய்திய
முக்தனாவான்.

சதுர்த்த: கண்ட: நாலாவது கண்டம்

அதாஹைனம் ஜனகோ வைதேஹோ யாஜ்ஞவல்க்ய
முபஸமேத்யோவாச பகவன்ஸந்ந்யாஸம்ப்ரூஹீதி |
ஸஹோவாச யாஜ்ஞவல்யோ ப்ரஹ்மசர்யம் பரிஸமாப்ய
க்ருஹீ பவேத் க்ருஹீ பூத்வா வநீ பவேத், வநீ பூத்வா பரவ்ரஜேத் |
யதிவேதரதா ப்ரஹ்மசர்யாதேவ ப்ரவ்ரஜேத் க்ருஹாத் வனாத்வா |
அத புன - ரவ்ரதீ வா வ்ரதீ வா ஸ்நாதகோ வாs ஸ்நாதகோ வா
உத்ஸந்நாக்னிகோவா யதஹரேவ விரஜேத்ததஹரேவ ப்ரவ்ரஜேத் ||4.1 ||

4.1 விதேஹ் நாட்டரசனான ஜனகர் யாக்ஞவல்கியரை விநயத்துடன் அணுகிக் கூறியது:- பகவத்ஸவரூபியான குருநாதரே! ஸந்நியாஸ முறையைக் கூறியருளுங்கள் என்று. அதற்கு அந்த யாக்ஞவல்கியர் அளித்த விடை பின் வருமாறு.

பிரம்மசரியத்தை முடித்து கிருஹஸ்தாசிரமத்தைக் கைக்கொள்ளவேண்டும்.
கிருஹஸ்தாசிரமத்திலிருந்து பின் வானப் பிரஸ்தாசிரமம் ஏற்கவேண்டும்.
வானப்பிரஸ் தாசிரமத்திற்குப்பின் ஸந்நியாஸியாகலாம். (பிரம்மசரி யத்திலிருந்து
ஸந்நியாஸியானால்) வேதவிரதங்களை முடித்தோ முடிக்காமலோ, ஸ்நாதகனாகியோ
ஆகாமலோ, அக்னியாராதனம் செய்பவனாகவோ செய்யாதவனாகவோ எந்தப்
பகலில் வைராக்கியம் பிறந்ததோ அந்தப் பகலிலேயே ஸந்நியாஸியாகட்டும்.

தத்தைகே ப்ராஜாபத்யாமேவேஷ்டிம் குர்வந்தி |
தது ந ததா கரோதி த்ரைதாதவீயாமேவ குர்யாத் |
ஏதயைவ த்ரயோ தாதவோ யதுத ஸத்வம் ரஜஸ்தம இதி |
‘அயம் தே யோநிர் ருத்விஜோ யதோ ஜாத:
ப்ராணாதரோசதா:|
த ஜாநந்நக்ன ஆரோஹாதா நோ வர்த்ததரயிம் ||’
இத்யனேன மந்த்ரேண அக்னிமாஜிக்க்ரேத் |
ஏஷ ஹ வா அக்னேர் யோனிர் ய:ப்ராண:
ப்ராணம் கச்ச ஸ்வாஹேத் யேவமேவைததாஹ ||4.2 ||

4.2 சிலர் (ஸந்நியாஸ மேற்பதற்குமுன்) பிராஜபத்ய இஷ்டியைச் செய்கிறார்கள். அது அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. மூன்று மூலப் பொருள்களை தியாகம் செய்தால் போதும். மூன்று முலப் பொருள்கள் ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்கள். (அவைகளைக்கடஎது
குணாதீதனாக வேண்டும்.) அக்னியைப் பார்த்து ‘எதிலிருந்து ருத்விக் உண்டானாரோ
அந்தப் பிராணனே உன் பிறப்பிடம்; பிராணனாலேயே நீ பிரகாசிக்கிறாய்; அதை அறிந்து
அக்னியே! மேலே கிளம்பி பிராணனில புகுந்து விடு. எங்களுக்கு முக்திச்செல்வத்தைச்
செழிக்கச் செய்’ என்ற இந்த மந்திரத்தால் அக்னி சக்தியைப் பிராணவாயுவுடன் மூக்கின்
வழி உள்ளே இழுத்துக் கொள்ளவும். எது பிராணனோ அதுவே அக்னியின் பிறப்பிடம்.
ஆகையால் ப்ராணம்கச்ச ஸ்வாஹா’ - பிராணனுக்குள் மறைந்து போ - என்று அதையே
விரஜா ஹோமமாகக் கருதி மானசிகமாக ஸந்நியாஸம் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

பத் ‘அக்னிம் ந்விந்தே - தப்ஸு ஜஹுயாத் |
ஆபோ வை ஸர்வா தேவதா: ஸர்வாப்ப்யோ
தேவதாப்ப்யோ ஜுஹோமி ஸ்வாஹேதி
ஹுத்வோத்த்ருத்ய ப்ராச்னீயாத் ஸாஜ்யம்:
ஹ்விரனாமயம் மோக்ஷ - மந்த்ரஸ்த்ரய்யேவம் வதேத் |
ஏதத்ப்ரஹ்ம ஏத துபாஸிதவ்யம் |
ஏவமேதத் பகவன்னிதி வை யஜ்ஞவல்க்ய || 4.3 ||

4.3 (ஜனங்கள் வசிக்கும்) கிராமத்தில்;இருந்து அக்னியைக் கொணர்ந்து மேற்கூறிய மந்திரத்தால் அக்னியில் நேய ஹோமம் செய்யவும். அக்னி (அருகாமைரில்) கிடைக்கா விட்டால் ஜலத்தில் ஹோமத்தைச் செய்யலாம். ஜலமே எல்லா தேவதைகளின் ஸ்வரூபம். ’ஸர்வாப்ப்யோ தேவதாப்ப்யோ ஜுஹோமி ஸ்வாஹா’ என்று ஹோமம் செய்து எழுந்து எல்லா நோயையும் போக்கும் நெய்கலந்த அந்த மீதி ஹவிஸ்ஸை உட்கொள்ளவும். மோக்ஷ மந்திரத்தை - ‘மயா ஸந்ந்யஸ்த:, ‘மயா ஸந்ந்யஸ்த:, ‘மயா ஸந்ந்யஸ்த:’ என்று மூன்று தடவை சொல்லவும்.

இதுதான் பிரம்மம்; இதுதான் உபாசிக்க வேண்டியது என்று உபதேசம். ‘பகவானே: யாக்ஞவல்கியரே: அது அங்ஙனம் என்பதை உணாந்து கொணடேன என்றார் ஜனகர்.என்றும் அன்புடன்

தொடறும் உபநிஷம்....

________________

1/24/2010

தேங்காய்க்குள்ளே பாம்!மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட தடை செய்துள்ளார்களாம்! அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று எச்சரிக்கை உணர்வாம்.

கவுண்டமணி காமெடியை ஒரு அரசாங்கமே செய்கிறது என்றால் இத்தனை கேவலமான அரசாங்கத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. தேங்காய் உடைப்பதே ப்ரார்த்தனையாகக் கொண்டு தேங்காயை மூட்டை மூட்டையாக கொண்டு போகும் சபரிமலைக்கே கேரள அரசு தேங்காய் உடைக்க தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழக அரசோ கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்கிறது.

அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று தேங்காய் உடைக்கத் தடை விதிக்கிறார்கள். பின்னர் கோவிலுக்குப் போனால் தானே குண்டு வைப்பார்கள் என்று கோவிலை மூடச் சொல்லுவார்கள். பின் தெருவில் குண்டு வைப்பார்கள் என்பதால் யாரும் தெருவில் நடக்ககூடாது என்பார்களோ!

அப்புறம் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வீடு புகுந்து தாக்குவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டு விடுங்கள் என்றும் சொல்லுவார்கள் போலிருக்கிறது.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தைரியமாக அவர்கள் வாழ வழிசெய்யாத அரசாங்கம் என்ன அரசாங்கமோ!

ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஊறு விளைவிப்பதே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரிகிறது.

நண்பர் பி. ஆர். ஹரண் என்பவர் ஒரு ஆன்லைன் பெட்டிஷன் போட்டிருக்கிறார். முடிந்தால் என்னோடு சேர்ந்து நீங்களும் அவருக்கு ஆதரவு கொடுங்கள்.


இந்து தர்மம் என்ற தேரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் எல்லோருடைய கடமையும் ஆகும்.
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

1/23/2010

கிருஷ்ணா கிருஷ்ணா!கண்ணனை காதலிப்பதைப் போன்றே நான் கண்ணதாசனையும் காதலிக்கிறேன். என் இறைவன் கண்ணனை நான் நண்பனாக, குருவாக, சகோதரனாக என்று பலவாறு விரும்பி வணங்குகிறேன்.

அந்த பக்தி அப்படியே கண்ணதாசனின் பாடலைக் கேட்கும் போது ஆழ்மனதில் இருந்து பிரவாகம் எடுத்து வெளியேறுவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். பதிவிட உட்கார்ந்தபோது கண்ணதாசனின் பாடல்களில் இப்பாடல் சட்டென்று மனதைக் கனமாக்கியதால் இந்த பாடல் வரிகளை என் நண்பர்க்ளான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் காதலன் கண்ணதாசனின் வரிகள் இதோ!

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!

கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா!


ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா!

ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா!

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா!

தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா! (கேட்டதும் கொடுப்பவனே)


தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா!

தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா!

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா!

அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா! (கேட்டதும் கொடுப்பவனே)


நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா!

நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா!

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா!

குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா!


எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

_______________________________________________________________________________

பாடியவர் : டி எம் எஸ்

எழுதியவர்: கண்ணதாசன்

ரசித்தவர்: அடியேன் :-)


ஜெய் ஸ்ரீக்ருஷ்ணா!
என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

1/14/2010

எண்ணங்களும் வாழ்வும்!எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும்
நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாகத் திகழலாம்.

எண்ணத்தின் வேகமும், இயல்பும், அறிந்தோர்க்கு எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதி பெறும்.

எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்.

எண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி செய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.

உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே ஆகும்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்.

ஒரு முறை ஒரு தீய எண்ணத்தை மனதில் எண்ணி விட்டால் போதும் மறுமடியும் அத்தகைய எண்ணம் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று. எனவே எண்ணங்களை நல்லவைகளாகவே எண்ணப்பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்.

- சுவாமி வேதாந்திரி மகரிஷி

என்றும் அன்புடன். ஹேராம் Visit for more www.hayyram.blogspot.com

1/12/2010

கமல் பேசினால்'செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத் தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை.
குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை" இது நடிகர் கமல்ஹாஸனின் சமீபத்திய மேடைப் பேச்சு.


ஆதீத பகுத்த‌றிவாள‌ராக‌ பேசுவ‌தில் க‌ம‌லுக்கு நிக‌ர் அவ‌ர் ம‌ட்டுமே. த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ளில் இது குழ‌ந்தைக‌ள் ப‌ட‌ம் இது எல்லோரும் பார்க்கும் ப‌ட‌ம், இது வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் பார்க்கும் ப‌ட‌ம் என்று த‌ர‌ம் பிரித்து காம‌க்க‌ளியாட்ட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையும் வெளியிட‌லாம் என்ப‌து இவ‌ர‌து நீண்ட‌கால‌ க‌ருத்து.


ந‌ம‌க்கு ஏற்ப‌டும் ச‌ந்தேக‌ம் எல்லாம், இப்பொழுது ச‌மூக‌த்தில் காம‌த்திற்க்கு அப்ப‌டி என்ன‌ ப‌ஞ்ச‌ம் வ‌ந்து விட்ட‌து? ச‌ரி அப்ப‌டியே அத‌ற்க்கென்று த‌னி சான்றித‌ழ்க‌ளோடு ப‌ட‌ம் வெளியிட்டால் உட‌ல் ரீதியான‌ எந்த‌ ப‌ய‌னும் இல்லாம‌ல் வெறும் க‌ண்க‌ளால் பார்த்து ம‌ன‌த்தில் காம‌ப்பித்தேறி வீட்டுக்குச் செல்லும் ஒரு இளைஞ‌ன் திரும‌ண‌மாகாத‌வ‌னாக‌ இருந்தால் அவ‌ன‌து காமத்தீயைத் த‌னிக்க என்ன‌ செய்வான். சொந்த‌ வீட்டில் வ‌டிகால் இல்லாத‌வ‌ன் ப‌க்க‌த்து வீட்டுக்குள் நுழைந்தால் ப‌ர‌வாயில்லையா? க‌ம‌ல் இதையும் நாக‌ரீக‌ம் என்று சொல்வாரா?


ஒரு ம‌னித‌ன் காதல் முதல் முதலாய், காம‌ உன‌ர்ச்சிக‌ளை புரிந்து கொண்டு அல்ல‌து அனுப‌விக்க‌ நினைக்கும் வயது 15 வயதிலிருந்து 19 வயது வரை. இந்த வயதிற்குள் பாலினச்சேர்க்கை இயற்க்கையாகவே தேவைப்படும். இதைப் புரிந்து தான் நமது முன்னோர்கள் இந்த பதின் வயதில் திருமணம் செய்வதை தேவையான வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் த‌ற்போது இதை குழ‌ந்தை திரும‌ண‌ம் என்றும் ச‌ட்ட‌ விரோத‌ம் என்றும் கூறி த‌ள்ளி விட்டார்க‌ள். பணத்தேவை திருமண வயதை 30 வரை கொண்டு சென்று விட்டது. இதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? பாலுணர்ச்சியின் சமநிலையற்ற வெளிப்பாடு, கள்ளத்தொடர்பு, பாலியல் ரீதியான‌ குற்றங்கள் என்று ப‌ட்டிய‌ல் நீள்கிற‌து.


ஏற்க‌ன‌வே தொலைக்காட்சியைத் திற‌ந்தால் தொப்புள் ந‌ட‌ன‌ங்க‌ளும், மார்புக்குலுக்க‌ல்க‌ளும் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சிக‌ள் என்ற‌ பெய‌ரில் ச‌மூக‌ச் சீர‌ழிவை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்திக் கொண்டிருக்கின்ற‌ன‌. இன்ட‌ர்நெட்டில் இளைஞ‌ர்க‌ளுக்கு கிடைக்காத பாலிய‌ல் காட்சிக‌ள் உண்டா? கைய‌ள‌வு செல்பேசியில், கால் இன்ச் சிப்பில் கப்ளிங்ஸ் விளையாடி களைத்துப் போகின்றனர் இன்றைய சிறார்கள். ப‌ள்ளிகூட‌த்திலேயே ப‌த்திக்கொள்ளும் காம‌ம் ஏன் எத‌ற்கு என்று புரிவ‌த‌ற்க்குள் அவை பாலிய‌ல் வ‌க்கிர‌ங்களுக்கும், குற்ற‌ங்க‌ளுக்கும் சென்று முடிந்து விடுகிற‌து. பள்ளிக்கூட படிப்பின் போதே அக்க‌ம்ப‌க்க‌த்து பெண்களை அரைக்கண்ணால் பார்த்து விட்டு "ஆண்டி" சூப்பர் டா என்று நாகரீக உற‌வு முறைகள் எல்லாம் "ஆன்டி க்ளைமாக்ஸில்" முடியும் க‌தை ந‌ம‌க்கு தெரியாத‌தா?


இவை எல்லாம் தெரிந்தும் அடுத்த‌ த‌லைமுறையை, த‌ர்ம‌ங்க‌ளைப் புரிந்து கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் , க‌லாச்சார‌த்தை புரிந்து கொண்டார்வ‌ர்க‌ளாக‌வும் எப்ப‌டி உருவாக்குவ‌து என்று பார்ப்ப‌தை விட்டு விட்டு காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல் காம‌த்திற்கும் க‌டைவிரியுங்க‌ள் என்று பேசுவ‌து ச‌மூக‌ பொறுப்ப‌ற்ற‌ த‌ன்மையையே காட்டுகிற‌து.


கஜுராஹோ கோவிலில் பாலியல் சிற்பங்கள் இல்லையா? என்று கேட்கும் அறிவு ஜீவிகள் அந்த காலத்தில் நமது பூமியில் வாழ்ந்த மக்கள் தொகை என்ன? அவர்கள் கடைபிடித்த தர்மங்கள் என்ன? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். காமத்திற்கு ஆசைப்படும் போதே முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்ததால் அனைவருக்கும் வீட்டுக்குள்ளேயே வடிகால்கள் இருந்ததையும் மறுக்க முடியாது. முறையற்ற உறவுக்கு அவசியமே இல்லாத காலம் அது. ஆனால் தற்காலத்தில் அப்படியா? வாழும் முறையில் இருக்கும் வடிகால்களை எல்லாம் அடைத்து விட்டு சினிமாவில் அதை கட்டவிழ்த்து விட்டால் கற்பனை வாழ்க்கையிலேயே இன்றைய இளைய சமூகம் திருப்தி அடைந்து விடுமா? என்பதையும் கமல் தனது அறிவு ஜீவித்தனம் மூலமாக சிந்திக்க வேண்டும்.


பெண்ணாசையால் சாக‌தே என்று கூறும் இராமாய‌ண‌த்தையும், ம‌ன்னாசையால் சாகாதே என்று கூறும் ம‌ஹாபார‌த‌த்தையும் மூட‌ந‌ம்பிக்கை என்று முட‌க்கியாகி விட்டது. எனவே நாழித‌ழ்க‌ளை திற‌ந்தால் தின‌ம் இர‌ண்டு க‌ற்ப‌ழிப்பு பாலிய‌ல் குற்ற‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாம‌ல் உள்ள‌ன‌. இவ‌ற்றில் பாலிய‌ல் திரைப்ப‌ட‌ங்க‌ளை தாரை த‌ப்ப‌ட்டையுட‌ன் வ‌ர‌வேற்க்க‌ வேண்டுமாம்.


கொக்கு கொண்டு வ‌ந்து போடாமலே இத்த‌னை ஜ‌ன‌த்தொகை என்றால் இனி த‌மிழ் சினிமாவில் த‌மிழ் க‌லைஞ‌ர்க‌ளே எடுத்து ந‌டித்து வெளிவ‌ரும் பாலிய‌ல் ப‌ட‌ங்க‌ளால் கொக்கு வாழ‌ கூட‌ இந்தியாவில் இட‌ம் இல்லாம‌ல் போகுமோ? ஈஸ்வ‌ரோ ர‌க்ஷ‌து:!
என்றும் அன்புடன். ஹேராம் Visit for morewww.hayyram.blogspot.com

1/09/2010

13. ஜாபாலோபநிஷத்


13. ஜாபாலோபநிஷத்து |


ஒம் பூர்ணமத்: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே ||
ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

ஒம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து
பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை
எடுத்தும் பூர்ணமே எஞ்சி நிற்கிறது.


பெயரும் தொடர்பும் : - முக்திகோநிஷத்துக்கூறும் வரிசையில் இது 13வதாக வருகிறது, பூர்ணமத:'
என்று சாந்தி பாடத்தில் அடையாளத்தால் இது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்தது என்பது அறியப்படும்.

இதைத் தொகுத்துக் கூறியவர் ஜாபால மகரிஷி யாதலால் இது ஜாபாலோபநிஷத்து எனப் பெயர் பெற்றுள்ளது. இதிலுள்ள ஆறு கண்டங்களில் முதலில் 'அவிமுக்தம்' என்றும் 'குருக்ஷேத்ரம்' என்றும் கூறப்படும் பிரம்மஸ்தானம் உடலிலுள்ள புருவமத்தி என்றும், அதை அறிந்தவனுக்கு
அந்திய காலத்தில் ஸ்ரீருத்ரர் தாரகமந்திரத்தை உபதேசித்து முக்தியை அளிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவதில் புருவமத்தி வாராணஸீ தான் என்று கூறப்படுகிறது. மூன்றாவதில்
ருத்ர ஜபத்தின் பெருமை கூறப்படுகிறது. நாலாவது ஐந்தாவது ஆறாவது கண்டங்களில் ஸந்நியாஸ லக்ஷணமும் பரமஹம்ஸ லக்ஷணமும் யாஜ்ஞவல்கிய கரிஷியால்விளக்கப்படுகிறது.

முதல்கண்டம்

1.பிருஹஸ்பதி யாக்ஞவல்க்யருக்கு உபதேசித்ததாவது. -(பிராணனுக்கு) குருக்ஷேத்ரமும் (முக்கியமான இடம்) (உடலில் உறையும் பிரகாசமான இந்திரியங்களாகிய)
தேவர்களுடைய தேவ பூஜாஸ்தானமும் எல்லாப் பிராணிகளுக்கும் பிரம்மஸதனம் எனப்படுவதும் எது என்றால் அவிமுக்தம் என்பது தான், பிராணனுக்கு முக்கிய ஸ்தானமாகிய குருக்ஷேத்திரம்; அதுதான் இந்திரிய தேவதைகளின் தேவ பூஜாஸ்தான்ம்; அதுதான் எல்லப்பிராணிகளும்
முடிவில்

ப்ரதம: கண்ட:

ப்ருஹஸ்பதிருவாச யாஜ்ஞவல்க்யம் | யதனு குருக்ஷேத்ரம் தேவானாம் தேவயஜனம் ஸர்வேஷாம் ப்ரஹ்ம ஸதனம் | அவிமுக்தம் வை குருக்ஷேத்ரம் தேவானாம் தேவயஜனம் ஸர்வேஷாம் பூதானாம் ப்ரஹ்மஸதனம் | தஸ்மாத்யத்ரகவசன கச்சதி ததேவ மன்யேதேதி | இதம் வை குருக்ஷத்ரம் தேவானாம் தேவயஜனம் ஸர்வேஷாம் பூதானாம் ப்ரஹ்மஸதனம் |
அத்ர ஹி ஜந்தோ: ப்ராணேஷு உத்க்ரமமாணேஷு ருத்ரஸ் தாரகம் ப்ரஹ்ம் வ்யாசஷ்டே
யேநாஸோவம்ருதோ பூத்வா மோக்ஷீ பவதி தஸ்மாதவிமுக்த -மேவ நிஹ்ஷேவேத அவிமுக்தம் ந விமுஞ்சேதேவ -மேவைதத் யாஜ்ஞவல்க்ய ||

__________________

அடைய வேண்டிய பிரம்மஸதனம். ஆகையால் ஒருவன் ஏதோ ஒரு இடத்திற்குச் சென்றாலும் அதையே குருக்ஷேத்தரம் (பிராணனுடைய ஸ்தானம்) என்றும் இந்திரிய தேவர்களின்
பூஜாஸ்தானம் என்றும், பிராணிகள் அடைய வேண்டிய பிரம்ம ஸதனம் என்றும், கருத வேண்டும். ஒரு ஜீவனின் பிராணன் உடலைவிட்டுக் கிளம்புகையில் பகவான் ருத்ரர் அங்கு தோன்றி
அந்த ஜீவனுக்கு தாரகப்பிரம்மத்தை உஅபதேசிப்பார். அதனால் அந்த ஜீவன் சாகாநிலையை அடைந்து முக்தி எய்தும். ஆகையால் அவிமுகதத்தைச் சேவிக்க வேண்டும். அவிமுக்தத்தை விடக்கூடாது. யாக்ஞவல்கியரே! அது அப்படித்தான் என்பது முடிவு.

அவிமுக்தம் எது என்பது அடுத்த கண்டத்தில் விளக்கப்படும்.

என்றும் அன்புடன்

தொடறும் உபநிஷம்....
________________

1/06/2010

இந்து தர்மத்தில் எல்லோரும் விபூதி பூசிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

இந்து தர்மத்தில் எல்லோரும் விபூதி பூசிக்கொள்வதன் அர்த்தம் என்ன

வெண்மையான இந்த விபூதிப் பொடியானது பசுவின் சானத்தை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெண்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பூமியில் பிறக்கும் எந்த ஒரு மனிதரும் இறுதியில் சாம்பலாக வேண்டியது தான் என்பதை எப்பொழுதும் நமது சிந்தனையில் இருத்தி வைப்பதன் மனோவியல் ரீதியான நடவடிக்கையே இந்த விபூதி பூசும் பழக்கம். அதாவது சிம்பாலிக் மெஸ்ஸேஜ் என்று சொல்லலாம்.


அரசன் முதல் ஆண்டி வரையில் எல்லோருக்கும் முடிவு ஒன்று தான். அது தான் சாம்பல், கடைசியில் சாம்பலாகப் போகும் நமது மாய வாழ்க்கையை, விபூதி நமக்கு உணர்த்துகிறது. வைஷ்ணவர்கள் இதையே திரும‌ண் என்று இட்டுக்கொள்வார்க‌ள்.ம‌ண்ணிலே பிற‌ந்த‌ நாம், ம‌ண்ணிலேதான் ம‌டிய‌ப்போகிறோம் என்ப‌தை ந‌ம‌க்கு நாமே நினைவு ப‌டுத்திக் கொள்வ‌து தான் இத‌ன் நோக்க‌ம்.!


இன்னும் விள‌க்க‌மாக‌ச் சொல்ல‌ வேண்டும் என்றால், தீயில் இட‌ப்ப‌டும் பொருள்க‌ள் யாவும் க‌ருகிப்போகின்ற‌ன‌. அத‌ன் பின்னும் இன்னும் தீயிட்டால், அது நீற்றுப் போய் வெளுத்து விடுகிற‌து. அதுவே இந்த‌ பூமியில் உள்ள‌ எல்லாப்பொருட்க‌ளுக்கும் இறுதி நிலை, மாறாத‌ நிலையாகும்.

எல்லாம் அழிந்த‌ பின்னும், அழியாத‌ ச‌த்திய‌மாக‌ நிற்க்க‌க் கூடிய‌ நிர‌ந்த‌ர‌மான‌ உருக்கொண்ட‌வ‌ன் இறைவ‌ன் என்ப‌தை ஆத்மார்த்த‌மாக‌ உண‌ர்ந்து அவ‌னை நினைக்க‌ வேண்டும் என்ப‌தாகும். மெய்யான‌ ஆத்மாவுக்கு அடையாள‌மாக‌ இதை பெரியோர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இந்த‌ உட‌ல் பொய்யான‌து என்ப‌தையும் நிர‌ந்த‌ர‌மான‌ அமைதி எதுவோ அது தான் உண்மை என்ப‌தும் ந‌ம்மை அறியாம‌லே ந‌ம் ம‌ன‌தில் ப‌திய‌வும் இந்த‌ விபூதி பூசும் ப‌ழ‌க்க‌ம் ம‌னோவிய‌ல் ரீதியாக‌ உத‌வுகிற‌து.


"விற‌குக் க‌ட்டையை அக்னி சாம்ப‌லாக்குவ‌து போல‌, அக்னி எல்லாக் க‌ரும‌ங்க‌ளையும் சாம்ப‌லாகுகிற‌து" என்ப‌து கீதையில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து நாம் வாழும் இந்த‌ வாழ்க்கையில் ந‌ம்மால் செய்ய‌ப்ப‌டும் ந‌ன்மை தீமை போன்ற‌ எல்லா காரிய‌ங்க‌ளையுமே 'கர்மா' என்ற‌ழைக்கிறோம். இந்த‌ ந‌ம‌து செய்கைக‌ளினால் ந‌ம‌க்கு ஏற்ப‌டும் ந‌ல்விளைவு அல்ல‌து தீய‌ விளைவு அதாவ‌து ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்வ‌தால் ஏற்ப‌டும் விளைவு ந‌ல்ல‌ விளைவு என‌வும் நாம் செய்த‌ தீய‌ காரிய‌ங்க‌ளால் ஏற்ப‌டும் விளைவு தீய‌ விளைவுக‌ள் என‌வும் குறிப்பிடுகிறோம். இவையே க‌ர்ம‌ வினைக‌ளாகும். இந்த‌ விளைவுக‌ளில் ந‌ல்ல‌ விளைவு அதிக‌மாக‌ இருந்தால் நாம் புண்ணிய‌ம் செய்திருக்கிறோம் என்றும், தீய‌விளைவுக‌ள் அதிக‌ம் இருந்தால் நாம் பாவ‌ம் செய்திருக்கிறோம் என‌வும் கூறுவ‌ர். இவ்வாறான‌ க‌ர்மாக்க‌ளை அக்னி எரித்து விடும் என்ப‌தும், அவ்வாறு எரித்த‌ பின் எஞ்சி நிற்ப‌து ஞான‌ம் தான் என்ப‌தையும் இந்த‌ விபூதி ஒரு க‌ண்ணால் பார்க்க‌க்கூடிய‌ அடையாள‌மாக‌ உள்ள‌து.


இத‌ற்கும் மேலாக‌ விபூதி என்ப‌து ஏற்க‌ன‌வே சொன்ன‌து போல் ப‌சுவின் சாண‌‌த்தை நெருப்பிலிட்டு, சாம்ப‌லாக்கிச் செய்ய‌ப்ப‌டுகிற‌து. ப‌சுவின் சாணம் தரையில் காயும் போது துர்நாற்றம் வீசுமே ஒழுய எரித்தால் அதற்கு மாறான வினையைக்கொடுக்கும் ஒரு அற்புதப் பொருள்.இது எரித்து சாம்பலாக உபயோகப்படுத்தினால் ப‌ல‌ துர்நாற்ற‌ங்க‌ள‌ப் போக்கும் த‌ன்மையை அடைகிற‌து. இது ஒரு 'ஆன்டி செப்டிக்' என்று கூட‌ச் சொல்ல‌லாம். அதாவ‌து ஒரு கிருமினாசினி. கிராம‌ங்க‌ளில் பெண்க‌ள் அதிகாலை வாச‌ற் தெளிக்கும் போது ப‌சுவின் சாண‌த்தை த‌ண்ணீரில் க‌ரைத்து தெளிப்ப‌தைப் பார்த்திருப்பீர்க‌ள்!. இது ஒரு கிருமினாசினி என்ப‌தை உண‌ர்ந்து நாம் அதை ஒரு வாழ்க்கை வ‌ழ‌க்க‌மாக‌வே வைத்திருக்கிறோம். இதை எரித்து சாம்ப‌லாக்கும் போது உட‌லைச் சுத்த‌ப்ப‌டுத்துவ‌து போல‌ உள்ள‌த்தையும் சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து. மேலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது அதிக‌மாக‌ த‌லை நீர் த‌ங்குவ‌தையும் த‌டுக்கிற‌து.

இப்ப‌டி உட‌லையும் ம‌ன‌தையும் ஒருசேர‌ சுத்த‌மாக‌ வைத்திருப்ப‌த‌ற்க்காக‌வே ந‌ம் முன்னோர்க‌ள் விபூதி பூசும் ப‌ழ‌க்க‌த்தை வைத்திருக்கிறார்க‌ள். நாமும் அதை க‌டை பிடிப்போமாக‌.


இந்து த‌ர்ம‌ம் என்ப‌து ம‌னோவிய‌லும், அறிவிய‌லும் ஆகும்.

என்றும் அன்புடன். www.hayyram.blogspot.com

1/04/2010

பொன்மொழி

தயவு

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
உயிருள் யாம் எம்முள் உயிர் இவையுணர்ந்தே
உயிர் நலம் பரவுகென்று ரைத்த மெய்ச்சிவமே

ருட் ஜோதி வள்ளலார் சுவாமி இராமலிங்கம்
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்ஜோதி

அவ்வைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர்!


"அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா‍-தொடுத்த‌
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா"

ஓங்கி உயர்ந்த மரங்களாக இருந்தாலும், அம்மரத்தில் பழங்கள் பழுக்க வேண்டிய பருவம் வந்தால் தான் பழுக்குமேயன்றி எல்லாக் காலங்களிலும் பழுக்காது. அதுபோல ஒருவர் தொடர்ந்து முயற்சியுடன் ஒரு செயலைச் செய்து வந்தாலும் அது நிறைவேறும் காலம் வரும் போது தான் நிறைவேறும். ஒருவர் தொடங்கும் செயல் உடனே பலனளித்து விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. முயற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் உரிய காலத்தில் பயன் தானாகவே கிடைப்பது உறுதி என்று ஒளவைப்பாட்டி வலியுறுத்துகிறார்.

அதாவது நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும், நேரம் வரும் போது தானே முயன்ற காரியம் கைகூடும். இதையே தான் பகவான் ஸ்ரீக்ருஷ்னர் பலன்களைப் பற்றி கவலைப்படாமல் கடமையை ஆற்றுவதே உனது பணியாக இருக்கட்டும். அவை நிறைவேறும் தருணத்தை நான் அளிப்பேன் என்று உரைக்கிறார் கீதையில். இதையே பலனில்லாமல் கடமை செய்ய பகவான் சொல்லிவிட்டதாக அபத்தமாக அர்த்தம் கொள்வர் சிலர். உண்மையில் கீதையின் இந்த சாரத்தை அவ்வைப்பாட்டி மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் என்றே கொள்ளவேண்டும்.


என்றும் அன்புடன். ஹேராம் Visit for morewww.hayyram.blogspot.com