தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

3/28/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

" தத்த " மந்த்ரம்
பொன் மொழிகள் 11
 நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும் உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் - "தத்த- அதாவது தானம் செய்; நல்ல கொடையாளியாக இரு" என்பதுதான். மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த "தத்த" மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக்காட்ட வேண்டும்.

3/20/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

தீப தத்துவம்
பொன் மொழி்ள் 10தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம்,
நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். இந்த உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

3/18/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

அன்னதானம்
பொன் மொழிக் 9தனக்கென்று ஒன்றுமே வைத்துக் கொள்ளாமல் தானம் பண்ண வேண்டும். ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும்போது அவர் என்ன ஜாதி என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிராமல், நம்மாலான உபகாரத்தைப்
பண்ண வேண்டும். 'யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது. அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் 
பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்.3/10/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்


நிஜமான சந்தோஷம்
பொன் மொழிகள் 8
இந்த லோகத்தில் சந்தோஷம் எப்படியும் சாச்வதமில்லை. கல்யானம், பட்டாபிஷேகம் எல்லாம் தாற்காலிக ஸந்தோஷம்தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம். அப்படிப் பார்த்தால் ரந்தி தேவன் கதைக்குத்தான நிஜமான மங்கள முடிவு.

3/09/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

ரந்திதேவன்
பொன் மொழிகள் 7
பாப கர்மாவினால்தான் துக்கம் வருகிறது. ஒருவரின் பாபத்தை இன்னொருவர்வாங்கிக் கொண்டு அனுபவிப்பதை vicarious suffering என்று சொல்வார்கள். லோகம் பூராவின் பாபத்தையும் வாங்கிக்கொண்டு தீர்ப்பதற்கே ஜீஸஸ் சிலுவையில் அறையப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தத் தியாக சிந்தனை நம் மதத்துக்குப் புதிதல்ல. ரந்திதேவன் வேண்டினது இதைத்தான். "எல்லார் துன்பமும் எனக்கு வந்து சேரட்டும்" என்றான். "எல்லா ஜீவராசிகளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்துக்கொண்டு அனுபவிக்கிறேன். அதனால் அவற்றின் துக்கம் தீரட்டும்" என்றான்.

3/06/2012

மாசி மகம்- ஸ்ரீ லலிதா ஜயந்தி-07-03-2012 புதன்.


மாசிமாதம் பௌர்ணமி திதி மகா நக்ஷத்ரம் ஆகிய மூன்றும்
ஒன்று சேரும் நன்நாள்தான் மாசிமகம். தனது புத்ரன் சனியின்
வீடான கும்ப ராசியில் இருக்கும் ஸூர்யனும், ஸூரியனின்
வீடான ஸிம்ஹ ராசியில் இருந்து சந்திரனும் நேருக்கு நேர்
ஏழாம் பார்வையாக பார்த்துக் கொள்ளும் நாள்.


மற்றும் ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பாளை;
1) தாரா 2) மாதங்கி 3) சின்ன மஸ்தா 4)பகளாமுகீ 5) தூமாவதீ
6) புவனேஸ்வரி 7)காளி 8)த்ரிபுர பைரவி 9)கமலா 10)லலிதா
என்பதாக பத்துவித ஸ்வரூபமாக ஆராதிக்கிறார்கள்.
இவ்விதம் 10 அவதாரங்கள் அம்பாளுக்கு ஏற்பட்டதாக 
புராணங்கள் கூறுகின்றன. இந்த 10 விதமான தேவி
அவதாரங்களுக்குள் ஸ்ரீ லலிதா (த்ரிபுர ஸுந்தரி) என்னும்
அவதாரமானது மாக மாதம் பௌர்ணமியான இன்று 
மாலையில்தான் நிகழ்ந்தது. ஆகவே ஸ்ரீ லலிதா ஜயந்தியாகவும்
இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.


இன்று மாலை ஸ்ரீ லலிதா தேவியின் விக்ரஹம் அல்லது படத்தை
நன்கு அலங்கரித்து வைத்து, ஸ்ரீ லலிதா த்ரிசதீ அல்லது
அஷ்டோத்தரத்தால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல்
நிவேதனம் செய்து, பூஜை செய்து, ஸுமார் 9 ஸுவாஸினிகளுக்காவது
தாம்பூலம் தரவேண்டும். மேலும் இன்று மாலை அனைவரும்
சேர்ந்தோ-தனித்தோ-சந்திரகிரணங்கள் உடலில் படுமாறு
வெட்ட வெளியில் (மாடி அல்லது பார்க்கில்) அமர்ந்து கொண்டு,
சந்திரனின் பிம்பத்தில் ஸ்ரீ லலிதா தேவியை த்யானம் செய்து கொண்டு
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகச்சிறப்பான
பலங்களைத்தரும். பெண்களுக்கு நீண்ட சௌபாக்யமும்,ஆயுஸும்,
ஆரோக்யமும், பாக்யமும் ஏற்படும். லலிதா ஸஹஸ்ரநாமம்
தெரியாதவர்கள் சௌந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி போன்ற
ஸ்தோத்திரங்களைச் சொல்லி தேவியை உபாஸிக்கலாம்.


(இம்மாத வைதிக ஸ்ரீ-யிலிருந்து டைப் அடிக்கப்பட்டது]

3/02/2012

ஸ்ரீ காஞ்சி பெரியாவரின் பொன் மொழிகள்

எப்படி இருக்க வேண்டும் ?
பொன் மொழிகள் 6

அன்புடைமை, அருளுடைமை போன்றவற்றை தான் அப்யாஸம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீக்ஷிதர், கோவிந்த தீக்ஷிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லாருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் கலந்து போகவும் கூடாது; ஒரேயடியாக பிரிந்தும் இருக்கக்கூடாது. ஸ்வதர்மப்படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும்; மனதிலே ஒன்று சேர்ந்து இருக்கவேண்டும்.