தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

4/30/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் களங்கமில்லாத ஒற்றுமை

பொன் மொழிகள் 17

"பாடும் பணி"யினால் ஜனங்களின் நெஞ்சம் உருகி பரமேச்வரனிடம் சேருமாறு செய்து, அப்பர் ஸ்வாமிகளின் வாக் கைங்கர்யம். அதோடு, சரீரகைங்கர்யமாக, ஒர் உழவாரப் படையை வைத்துக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் ப்ராகாரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கினார். அப்பர் காட்டிக் கொடுத்தபடி, அம்மையப்பரிடம் பக்தி வவத்து, எல்லாரும் அந்த ஒருவனின் 
குழந்தைகல் என்ற அன்பில் ஒன்றுபட்டு சேவை செய்யும்போது களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமை ஏற்படும்.

4/29/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் தொண்டின் பயன்

பொன் மொழிகள் 16

தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும், எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். 
குளத்தில் ஜலம் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

4/22/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் ஐந்து மகா யஜ்ஞங்கள்

பொன் மொழிகள் 15

வைதிக தர்மத்திற்கு சாரமாக இருப்பது பஞ்ச மஹா யஜ்ஞங்கள் எனும் ஐந்து வேள்விகள்.
வேதம் ஒதுவது, ஒதுவிப்பது எனும் வித்யா தானமே "ப்ரம்ம யஜ்ஞம்". மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பணமே "பித்ரு யஜ்ஞம்". ஈசுவர ஆராதனமே "தேவ யஜ்ஞம்". நாயும் காக்கையும் உட்பட எல்லா ஜீவராசிகளுக்கும் பலி போடுவது. "பூத யஜ்ஞம்". அதிதி - விருந்தினரை உபசாரம் செய்வது "ந்ரு யஜ்ஞம்". படைப்பில் ஒரு பிரிவைக்கூட, விடாமல் உபகாரம் 
பண்ணி வைப்பது பஞ்ச மஹா யஜ்ஞம்.
4/13/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் அஹங்கார நாசம்

பொன் மொழிகள் 14


வைத்துக்கொண்டு அனுபவிப்பதை விட, கொடுத்து அனுபவித்தால் அதுவே பரம ஆனந்தத்தைத் தருகிறது. மஹாபலி வாரி வாரிக் கொடுத்தான். ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தை
அவன் பகவானுக்குப் பலி கொடுக்க வில்லை. இதனால் தான் பகவானே அவனிடம் இந்த அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலைலயிலே கால் வைத்தான்.

4/10/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

ஆத்ம அபிவிருத்தி
பொன் மொழிகள் 13


வாஸ்தவமாகவே ஒருவன் ஆத்ம அபிவிருத்திக்காக ஏகாந்தமாக, சமூகத்தை விட்டு, ஒரு தொழிலும் செய்யாமல் இருக்கிறான் என்றால், அவன் சமூகத்துக்குப் பயன் இல்லாதவந்தானா ? இப்படி நினைப்பது தவறு. 
நம்மில் ஒருவன் அப்படி உயரப்பாடுபடுகிறான் என்றால் அதுவே நமக்கு சந்தோஷம் தரத்தான் வேண்டும். அவனது சரீர யாத்திரை தடப்பதற்கு அவசியமான சஹாயத்தை நாம் செய்யத்தான் வேண்டும். அவன் பக்குவம் அடைந்து யோக சித்தனாக ஆகிவிட்டால், தன்னாலேயே அவனிடமிருந்து ஜனங்களின் தாபங்களைத் தீர்க்கும் சக்தி வெளிப்படும். அவர்களை 'பாரஸைட்' என்று திட்டக்கூடாது.

4/09/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள்

நிரைந்த ஞானம்
பொன் மொழிகள் 12

'தானம் கொடுக்கிறோம்' என்று சொல்வது கூடத்தப்புத்தான். 'பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்' என்று அடங்கி, பவ்யமாகக் கொடுக்கவேண்டும். 'பியாதேஹம்' என்கிறது உபநிஷதம். கொடுக்கிறவந்தான் பயப்பட வேண்டும். 'ஸம்வித்'துடன் என்று சொல்கிறது. 'ஸம்வித்' என்றால் 'நிறைந்த ஞானம்'. கொடுக்கிறவன், வாங்கிக் கொள்பவன் இரண்டு பேரும் வாஸ்தவத்தில் ஒருவனேதான் என்ற அறிவுதான் அந்த 'ஸம்வித்'.