தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

5/27/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் உயிர் பிரிபவருக்கு உதவி

பொன் மொழிகள் 24
சாகிற நிலையில் இருக்கும் ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பெரிய பரோபகாரம் செய்யலாம். அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கும் பரம உத்க்ருஷ்டமான உபகாரம். இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் பகவத் நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால், அது அந்த ஜீவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக் கொண்டே இருக்கும். ஒருவன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாக இருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த சம்ஸாரத்திலிருந்து ப்புவதற்குப் பகவானைப் பிடித்துக் கொள்ளத் விக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டாலும் கூட, நாம் உண்டாக்கித் தந்து விட்டால், பிடித்துக் கொண்டு விடுவான். நாம் பகவானை நினைக்கும் படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால், அதைப் போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.


ஆயுள் முழுக்க நாத்திகனாக இருந்தவன்கூட, அந்திம காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்தியின் கையில்தான் இருக்கிறோம் என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமலிருக்கமாட்டான். ஆதலால் நாம் அவனுக்கு உதவுவதை அவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.

5/20/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் குறுக்கு வழி

பொன் மொழிகள் 23

சம்சாரத்திலிருந்து விடுபருவதற்குக் வழி இல்லையா ? ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார். "என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்துவிடுகிறான் என்று சொல்லி, "நாஸ்தி அத்ர ஸம்சய:" - இதில் சந்தேகமே இல்லை என்று 'காரன்டி' கொடுத்திருக்கிறார். (கீதையில்)."அந்த காலே சமாம் ஏவஸ்மரன்" - என்னை மட்டுமே என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்பக் கஷ்டம்தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் அச்வமேதம்

பொன் மொழிகள் 22


அச்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா? அச்வமேதத்துக்கு சமமான பலனைத்
தரும் ஒரு பணி இருக்கிறது. மற்ற எல்லா வற்றையும்விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அநாதைப் ப்ரேத ஸம்ஸ்காரம். பரோபகாரமாக, இறந்து போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக்
கொள்கிறோம்.

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் உடலின் சிறப்பு

பொன் மொழிகள் 21

ஜீவாத்மா, பதினாறு கலையுள்ள புருஷன் என்பார்கள். பதினைந்து கலைகள் உயிராக இருப்பது
என்றும் உடம்பும் ஒரு கலை என்றும் எனவே உயிர் போன பின்னும் ஒரு கலையுள்ள அந்த உடலை,
ஈச்வரார்ப்பணமாக, ப்ரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றூம் ஒரு கருத்து உண்டு. தஹனம் செய்வதை "அந்த்யேஷ்டி" --- அதாவது 'இறுதியான வேள்வி " என்று உயர்வாகச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பதிலிருந்து உபநயனம், விவாஹம் என்று வாழ்நாள் கர்மா முழுவதையம் வேள்வியாக ஈச்வரனிடம் ஆஹீதி செய்துகொண்டே இருக்கும் வகையில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 
வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருவனுக்கு வாழ்க்கை முடிந்தபிறகு மற்றவர்கள் செய்யும் யாகம் 
தான் ப்ரேத சம்ஸ்காரம்.

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் எளிய வாழ்க்கை

பொன் மொழிகள் 20
எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரித்தான் ஆசை.
எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேமம். 'நாம் எப்படி
வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்" என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். 
அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாகவேண்டும். அதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க
வேண்டியதில்லை.

5/17/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் தனக்கு மிஞ்சி தானம்

பொன் மொழிகள் 19
'தனக்கு மிஞ்சி தானம்' என்பதற்கு நான் புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு
அத்தியாவசியம், அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் "தனக்கு" என்று இங்கே சொல்லியிருக்கிறார்கள். தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சித் தானம்". நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகச் செலவைக் கட்டுப்படுத்தி, தனக்கு மிஞ்சும்படிப் பண்ணவேண்டும்.

5/15/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் பொதுச்சேவை

பொன் மொழிகள் 18ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்தான் சண்டை ஜாஸ்தியாகிறது.
வாதத்தால் ஒற்றுமை ஏற்படுத்த முற்படாமல், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்றுகூட இல்லாமல், பல பொதுக்காரியங்களை எடுத்துப் போட்டுக்கொண்டு எல்லோரும் சேர்ந்து அதைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் உண்டாகி விடும்.