தரிசியுங்கள்

தரிசியுங்கள்
அருள்கிடைக்கும்

6/04/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் சுத்த சரீரம்

பொன் மொழிகள் 26

அவனவனும் தன் உடலையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம் தான். துர்ப் பழக்கங்களால் ஒருவன் வியாதியை சம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்புறம் அவனால் எப்படிப் பரோபகாரம் ப்ண்ண முடியும்? அது மட்டுமல்ல. அவனது நோய் மற்றவர்களுக்கும்
பரவக்கூடும். துர்ப்பழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொள்வது பர அபகாரம் ஆகும். நம்மை மீறி வந்தால் அது வேறு விஷயம்.

6/03/2012

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் ப்ராணாவஸ்தையில் செய்ய வேண்டியது

பொன் மொழிகள் 25

ப்ராணாவஸ்தையில் இருக்கிறவர்களிடம் கோயில் பிரஸாதத்துடன் போகவேண்டும். அவர்களுக்கு கங்காதீர்த்தம் கொடுக்க வேண்டும். விபூதி இடவேண்டும். துளஸியை வாயில் போட வேண்டும். அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு 'சிவசிவ சிவசிவ' என்றோ 'ராமராம ராமராம' என்றோ உரக்கச் சொல்ல வேண்டும். உரக்கச் சொல்ல வேண்டியது அவசியம்.
ஜீவன் காதிலே அது பட்டு அது மனதைத் திருப்பவேண்டுமாதலால், உயிர் போகும் வரையில் இப்படி நாமஜபம் செய்வது தான் ச்ரேஷ்டம்.